ADDED : பிப் 24, 2025 12:38 AM

பாலக்காடு; பாலக்காடு அட்டப்பாடியில், தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி புதுார் அரளிக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ரேசி, 55. இவரது மகன் ரகு 38. ரகுவின் மனைவி செல்வி. குடிபோதையில் ரகு அடிக்கடி வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த ரகு, மனைவி செல்வியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை தடுக்கச்சென்ற தாய் ரேசியை, தன் கையில் கிடைத்த கல்லால் ரகு, சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் தலையில் ஏற்பட்ட அடியால் ரத்தம் கசிந்து, சம்பவ இடத்திலேயே ரேசி உயிரிழந்தார். சம்பவத்திற்கு பிறகு தப்பி ஓட முயன்ற ரகுவை, அப்பகுதி மக்கள் பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த புதூர் போலீசார், ரகுவை கைது செய்தனர். ரேசியின் உடலை அகளி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்த பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அகளி டி.எஸ்.பி., அசோகன் தெரிவித்தார்.

