ADDED : பிப் 22, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உடல்நலக் குறைவு காரணமாக டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா, 78, நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் உள்ள சோனியாவுக்கு, நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முழுதும், மருத்துவமனையில் டாக்டர்களின் முழு கண்காணிப்பின் கீழ் சோனியா சிகிச்சை பெற்றார்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சோனியாவின் உடல்நிலை முழுதும் சீரானதால், நேற்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இது, வழக்கமான மருத்துவ பரிசோதனை மட்டும் தான் என, காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.