காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு காயத்ரி ஜெப யக்ஞம்
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு காயத்ரி ஜெப யக்ஞம்
ADDED : ஜூன் 02, 2024 06:00 AM

சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலை, காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், இன்று 'சிறப்பு காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞம்' நடக்கிறது.
காயத்ரி மந்திரம் ஜெபிப்பதால், பாபம் என்ற இருட்டு அகன்று, ஒளிமயமான வாழ்க்கை அமைகிறது. இதுவரை காயத்ரி ஜெபம் செய்யாதவர், இவைகளை செய்த பின், வாழ்க்கை அமைதியுடனும், ஒளியுடனும் நடக்கிறது என்பதை உணர்வர்.
காயத்ரி மஹா மந்திரம், விஸ்வாமித்ர மகரிஷியால் கொடுக்கப்பட்டது. இறைவனை அடையவும், பேரின்ப நிலையை எய்தவும் உதவும்.
ஒரே இடத்தில்...
ஜெப சாதனையில் ஒழுங்கு மிக முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.
மதுரை காயத்ரி பரிவார் என்ற அமைப்பை, அமைப்பாளர் டி.ஏ.ராஜாராம் உருவாக்கி, பல ஆண்டுகளாக ஜெப யக்ஞத்தை தொடர்ந்து நடத்தி வந்தார்.
அலோபதி, ஹோமியோபதி, கீமோபதி, திரோயோபதி, நேசுரோபதி, ஆயுர்வேதோபதி போன்ற எல்லா பதிகளாலும் நோயை குணப்படுத்த முடியாது. தெய்வீக நாமோபதி ஒன்று தான் எல்லோரையும் காக்க முடியும். பகவான் நாமா ஒன்றே, 'சர்வரோக நிவாரணி'யாகும்.
பசுவின் பால்
வேதங்களின் அரிய தாயே காயத்ரி. பசுவின் பாலை விட சிறந்த பால் கிடையாது. அதுபோல் காயத்ரியை விட சிறந்த மந்திரம் கிடையாது. மூன்று உலகங்களுக்கும் தாயானவள்.
இந்த ஒரே மந்திரம் ஜெபிக்கும் போது, காலையில் காயத்ரி என்றும், மத்தியானம் ஸாவித்ரி என்றும், மாலையில் ஸரஸ்வதி என்றும் பெயர்களை பெறுகின்றது என்பது ஸந்தியா வந்தனத்தில் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக காயத்ரி சுபிஷத்தையும், தனதானியங்களையும் கொடுப்பவள்; ஸாவித்ரி நோய்களை நீக்கி மரணத்தை வென்று நீண்ட ஆயுளை கொடுப்பவள்; ஸரஸ்வதி வித்யை, கலை, பரசாதனம் போன்றவற்றை அளிக்க வல்லவள்.
இத்தகைய பேறு பெற்ற 'சிறப்பு காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞம்' பெங்களூரு காயத்ரி பரிவார் அமைப்பு சார்பில், பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலை, காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று காலை 7:30 மணிக்கு துவங்கி 12:00 மணி வரை நடக்கிறது.
பக்தர்கள் வருகை தந்து பலன் பெறும்படி, பெங்களூரு காயத்ரி பரிவார் அமைப்பினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.