வெளிநாட்டு மொழிகளை கற்க சிறப்பு பயிற்சி பஞ்., அலுவலகங்களில் 'அக்கா கபே, கேன்டீன்'
வெளிநாட்டு மொழிகளை கற்க சிறப்பு பயிற்சி பஞ்., அலுவலகங்களில் 'அக்கா கபே, கேன்டீன்'
ADDED : மார் 08, 2025 02:12 AM
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்க, யுவநிதி திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.58 லட்சம் பேர், தங்கள் பெயரை பதிவு செய்து உள்ளனர். மாத உதவி தொகைக்கு 286 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது
ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவ துறையில் பணியாற்ற, நர்சிங் மாணவர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளின் மொழியை கற்று கொள்ள, பயிற்சி மையம் அமைக்க உள்ளோம்
பெங்களூரில் சர்வதேச வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளோம். இதன்மூலம் நமது மாநிலத்தினருக்கு, வெளிநாடுகளில் வேலை கிடைக்கும்
உலக திறன் போட்டிகளில் இந்தியர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, இந்தியா திறன் -- 2026 என்ற பெயரில், பெங்களூரில் பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளோம்
அழிந்து வரும் பாரம்பரியம், திறன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் வகையில் 2,000 பேருக்கு எம்பிராய்டரிங் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தாவணகெரே, பீதரில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி மையங்களில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும்
தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கு விரைவான கடன் வசதி, நிதி பாதுகாப்பு வழங்குதல், தொழில் முனைவை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு மாநில அளவில் 'அக்கா' கூட்டுறவு சங்கம் நிறுவப்படும்
தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பத்து நகரங்களில் உள்ள இந்திரா கேன்டீன்களை பெண்கள் பராமரிக்க உள்ளனர். இந்த முயற்சி சோதனை அடிப்படையில் நடத்தப்படும்
அனைத்து மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அலுவலகங்களில் அக்கா கபே மற்றும் கேன்டீன் நிறுவப்படும்
அனைத்து தாலுகாக்களிலும் விவசாய கிளஸ்டர் அமைக்கப்படும்
கல்யாண கர்நாடகா மண்டல வளர்ச்சி ஆணையம் சார்பில் 25 கோடி ரூபாய் செலவில், கலபுரகி சேடத்தில் சர்வதேச தரத்துடன் கூடிய வகுப்பறையுடன் ஐ.டி.ஐ., கல்லுாரி துவங்கப்படும்
துமகூரு மதுகிரி, விஜயபுரா இண்டியில் நபார்டு திட்டத்தின் கீழ்; பல்லாரி கம்பளி, ராய்ச்சூர், சிந்தனுாரில் கல்யாண கர்நாடக மண்டல வளர்ச்சி ஆணையத்தின் சார்பில், அரசு கருவி அறை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்
ஜெர்மன் மொழியை கற்று கொள்ளும் வகையில் 20 கோடி ரூபாய் செலவில், பயிற்சி மையம் அமைக்கப்படும். இது 20,000 மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.