பெண்ணுக்கு கத்தி குத்து: தலைமறைவான வாலிபருக்கு வலை
பெண்ணுக்கு கத்தி குத்து: தலைமறைவான வாலிபருக்கு வலை
ADDED : செப் 11, 2024 10:10 PM
பாலக்காடு : பாலக்காடு அருகே, பாலியல் பலாத்கார முயற்சியில், பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் பெண், நேற்று காலை தோட்டத்தில் புல் அறுக்கும் பணிக்கு சென்றார். அப்போது, கொட்டில்பாறை பகுதியை சேர்ந்த சைமன் என்பவர், பெண்ணை பின்தொடர்ந்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
தப்பிக்க முயன்ற பெண் ணை, புல் அறுக்க பயன்படுத்தும் கத்தியால் குத்தி விட்டு, சைமன் தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், அவரை மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, பாலக்காடு, புதுச்சேரி (கசபா) போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சைமனை தேடுகின்றனர்.

