இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்
ADDED : ஜூன் 27, 2024 05:17 PM

புதுடில்லி: இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று(ஜூன் 27) பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க 10 ஆண்டுகளாக தே.ஜ., கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.