ADDED : ஆக 30, 2024 09:48 PM
முல்பாகல் : முல்பாகல், தாய்லுாரில் திருட்டு போன டிராக்டரை போலீசார் கண்டுபிடித்தனர்.
முல்பாகலின் தாய்லுார் கிராமத்தில், ராஜப்பா என்பவர் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் ஜூலை 31 இரவு திருட்டு போனது.
ஆகஸ்ட் 1ம் தேதி முல்பாகல் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
முல்பாகல் போலீசார் விசாரித்து வந்தனர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், தம்மனபள்ளி என்ற இடத்தில் டிராக்டர் இருப்பதாக அறிந்தனர்.
போலீசார், அந்த இடத்திற்கு சென்று நேற்று டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதை திருடிய சீனிவாசலு, 40 என்பவரை கைது செய்தனர்.
அங்கு ஒரு டிராக்டர் மட்டுமில்லை; நான்கு டிராக்டர்கள் இருந்தன. இவைகளும் வெவ்வேறு இடங்களில் திருடப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவற்றின் மதிப்பு 14 லட்சம் ரூபாய். சீனிவாசலுவிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.