ADDED : ஆக 08, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசாத்பூர்: வடமேற்கு டில்லியின் ஆசாத்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்கள் குழு ஒன்று கற்களை வீசி, வாகனங்களைச் சேதப்படுத்தும் வீடியோ வைரலானது.
சம்பவ இடத்தை அடையாளம் கண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வாகனங்கள் மீது பள்ளி மாணவர்கள் கற்களை வீசித் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து வரும் போலீசார், மாணவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் பெறவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.