தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மாணவர்கள் ஊழியர்கள் 'குஷி'

மாணவர்கள் ஊழியர்கள் 'குஷி'

மாணவர்கள் ஊழியர்கள் 'குஷி'


ADDED : ஆக 12, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆகஸ்டில் தொடர் விடுமுறை கிடைப்பதால், மாணவர்களும், அரசு ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர்.

ஆகஸ்டில் அதிகமான விடுமுறைகள் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை உள்ளது. மறுநாள் 16ல் வரமஹாலட்சுமி விரதம் உள்ளதால், அன்றைய தினம், 'ஆப்ஷனல்' விடுமுறை இருக்கும்.

அரசு, தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தேவைப்பட்டால் விடுமுறை எடுத்து கொள்ளலாம். எனவே ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொள்வர்.

ஆகஸ்ட் 17ல், சனிக்கிழமை சில பள்ளிகள், அரை நாள் மட்டும் இருக்கும். மறுநாள் ஞாயிறு விடுமுறை. ஆகஸ்ட் 19ல், ரக்ஷா பந்தன், அரசு விடுமுறை உள்ளது.

சனிக்கிழமை மட்டும் விடுமுறை எடுத்து கொண்டால், தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையை கொண்டாடலாம். இதை பயன்படுத்தி, சுற்றுலா செல்ல பலரும் தயாராகின்றனர்.

பஸ்கள், ரயில்களில் ஏற்கனவே டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us