sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ நீரில் மூழ்கிய ஓட்டு இயந்திரம்

நீரில் மூழ்கிய ஓட்டு இயந்திரம்

நீரில் மூழ்கிய ஓட்டு இயந்திரம்


ADDED : ஏப் 20, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 12:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வடக்கு லக்கிம்பூர், அசாமில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற சொகுசு கார் நீரில் மூழ்கியது. இதனால், அந்த இயந்திரம் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் முதற்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.

இங்கு, காலை 7:00 மணி முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வந்தனர்.

இந்நிலையில், லக்கிம்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அமர்பூரில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையொட்டி, லக்கிம்பூர் லோக்சபா தொகுதிக்கு மாற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, சொகுசு காரில் தேர்தல் அதிகாரிகள் உடனே அனுப்பினர்.

எனினும், தியோபானி நதியை கடக்க முயன்றபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சொகுசு கார் நீரில் மூழ்கியது.

அதில் வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சேதம் அடைந்தது.

இதையடுத்து, மாற்று இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us