சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை பலத்த காற்றுடன் லேசான மழை
சட்டென்று மாறிய வானிலை... பலத்த காற்றுடன் லேசான மழை பலத்த காற்றுடன் லேசான மழை
ADDED : ஏப் 24, 2024 02:13 AM

� புதுடில்லியில் பகல் முழுதும் வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை நீர் வீட்டுக்குள் ஒழுகாமல் இருக்க தன் குடிசையின் மேற்பகுதியை பாலித்தீன் கவரால் மூடும் பெண்.
� கர்தவ்ய பாதையில் மழையை ரசித்தபடி நடந்து சென்ற டில்லிவாசிகள்.
� தலைநகர் டில்லியில் நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. பகல் முழுதும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் வானிலை சட்டென்று மாறியது. பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
சில இடங்களில் செடி மற்றும் மரங்கள் சரிந்தன. மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. குடிசைகளில் வசிப்போர் சற்று அச்சம் அடைந்தனர். காலையில் காற்றின் ஈரப்பதம் 28 முதல் 66 சதவீதம் வரை இருந்தது. டில்லியில் இன்றும் பலத்த காற்று வீசும் எனவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதுடில்லி அருகே ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமைப் பயிர்கள் நீரில் மூழ்கின. மழையால் சரிந்து கிடக்கும் கோதுமைப் பயிரை வருத்தத்துடன் பார்க்கும் விவசாயி.

