ADDED : ஜூலை 15, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் நேற்று மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய சுத்திகர்ண யாக பூஜை, சுவாமி பவித்ர உற்சவம் நடந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் நான்கு பேர், பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் மூன்று அர்ச்சகர்கள் பூஜைகளை செய்தனர்.
தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், ரமேஷ் ஜெயின், ஸ்ரீவாரி சேவா சமிதி நிர்வாகிகள் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
பூஜையில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.