ராகுல் குறித்து அவதுாறு பதிவு பீஹார் யு டியூபருக்கு 'சம்மன்'
ராகுல் குறித்து அவதுாறு பதிவு பீஹார் யு டியூபருக்கு 'சம்மன்'
ADDED : ஜூன் 22, 2024 04:28 AM

பெங்களூரு : காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறித்து, பிரபல யு டியூபர் அஜித் பாரதி, தன் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் அளித்த புகாரில், விசாரணைக்கு ஆஜராக, போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பீஹாரை சேர்ந்தவர் அஜித் பாரதி. பிரபல யு டியூபராக உள்ளார். இவரை 7 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
கடந்த 6ம் தேதி, 'அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து விட்டு, மீண்டும் பாபர் மசூதியை கொண்டுவர காங்கிரஸ் எம்.பி., ராகுல் முயற்சிக்கிறார்' என, தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீசில், காங்கிரசின் சட்டப்பிரிவின் செயலர் போப்பண்ணா புகார் அளித்திருந்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், அஜித் பாரதிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
'சம்மன் கிடைத்த ஏழு நாட்களுக்குள் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

