sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவாலை ஆசீர்வதிக்க சுனிதா வேண்டுகோள் வாட்ஸாப் எண் அறிவிப்பு

/

கெஜ்ரிவாலை ஆசீர்வதிக்க சுனிதா வேண்டுகோள் வாட்ஸாப் எண் அறிவிப்பு

கெஜ்ரிவாலை ஆசீர்வதிக்க சுனிதா வேண்டுகோள் வாட்ஸாப் எண் அறிவிப்பு

கெஜ்ரிவாலை ஆசீர்வதிக்க சுனிதா வேண்டுகோள் வாட்ஸாப் எண் அறிவிப்பு

1


ADDED : மார் 29, 2024 10:05 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:05 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா நேற்று, 'கெஜ்ரிவால் கோ ஆசீர்வாத்' என்ற பிரசாரத்தை நேற்று துவக்கியுள்ளார்.

இதுகுறித்து, சுனிதா கெஜ்ரிவால் கூறியதாவது:

என் கணவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். அவருக்கு பொதுமக்கள் தங்கள் ஆசீர்வாதத்தை வழங்க வேண்டும். அதற்காக, 82973 24 624 மற்றும் 97002 97 002 ஆகிய இரண்டு வாட்ஸாப் எண்களை அறிமுகப்படுத்துகிறேன். இந்த எண்களில் வாட்ஸாப் வாயிலாக பொதுமக்கள் தங்கள் ஆசீர்வாதத்தை கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்.

இந்த எண்களுக்கு அனுப்பும் தகவல்கள் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கொண்டு சேர்க்கப்படும். கடந்த 30 ஆண்டுகளாக நான் அவருடன் இருக்கிறேன். தேசபக்தி அவரது ஒவ்வொரு செயலிலும் உள்ளது. அவரை முதல்வர் என்று பார்க்காமல் சகோதரம் மற்றும் மகனாக டில்லி மக்கள் நினைக்கின்றனர்.

சர்வாதிகாரத்துக்கு எதிரான இந்தப் போரில் மக்கள் அனைவரும் இணைந்து போராடுவோம். வேறு ஏதாவது அவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றாலும் இந்த எண்களில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒவ்வொருவரும் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்க நீங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us