தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நடிகை சுமலதா பா.ஜ.,வுக்கு ஆதரவு

நடிகை சுமலதா பா.ஜ.,வுக்கு ஆதரவு

நடிகை சுமலதா பா.ஜ.,வுக்கு ஆதரவு


ADDED : ஏப் 03, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: மறைந்த பிரபல கன்னட நடிகர் அம்பரிஷின் மனைவி நடிகை சுமலதா, 60. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் பா.ஜ., ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு, அன்றைய முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலை தோற்கடித்தார்.

இம்முறை மாண்டியா தொகுதியில் சீட் தரும்படி, பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து சுமலதா கேட்டிருந்தார். ஆனால், கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு மாண்டியா தொகுதியை பா.ஜ., ஒதுக்கியது. இங்கு குமாரசாமி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால், சுமலதா மீண்டும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என கருதப்பட்டது.

இதற்கிடையில், இவரை மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசினார். குமாரசாமியும், சுமலதாவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிலையில், மாண்டியாவில் நேற்று நடந்த தன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ''இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்; பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us