sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி பசுமை பரப்பை அதிகரிக்க ஆலோசனை மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

/

டில்லி பசுமை பரப்பை அதிகரிக்க ஆலோசனை மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

டில்லி பசுமை பரப்பை அதிகரிக்க ஆலோசனை மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

டில்லி பசுமை பரப்பை அதிகரிக்க ஆலோசனை மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை


ADDED : ஜூன் 27, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மக்கள் அதீத வெப்பத்தை உணர்ந்து வரும் நிலையில், நகரில் மறைந்து வரும் பசுமைப் பரப்பை மேம்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சத்தர்பூரில் இருந்து தெற்காசிய பல்கலைக்கழகத்திற்கு சாலை அமைக்கும் பணிக்காக, தெற்கு ரிட்ஜ் சத்பரி பகுதியில் ஏராளமான மரங்கல் வெட்டப்பட்டன. இதை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், மரங்களை வெட்ட அனுமதித்ததற்காக டி.டி.ஏ., துணைத் தலைவர் சுபாசிஷ் பாண்டாவுக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

துணைநிலை கவர்னர் உத்தரவுப்படி சத்பரி பகுதியில் மரம் வெட்டப்பட்டதா என்பது குறித்து, தெளிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவருக்கு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து டி.டி.ஏ., துணை தலைவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டி.டி.ஏ., துணை தலைவர் தாக்கல் செய்த தவறான பிரமாணப் பத்திரத்தின் வாயிலாக நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தேசியத் தலைநகரில் மரங்கள் வெட்டப்பட்ட வெட்கக்கேடான செயல்களை இலகுவாக ஒதுக்கிவிட முடியாது. டி.டி.ஏ.,ஆல் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 100 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நகரில் மரங்கள் சட்டவிரோதமாக சேதப்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து வனத்துறையும் மர ஆணையமும் கண்காணிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது குறித்து டில்லி அரசு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மர ஆணையம், எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி, டி.டி.ஏ., ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம்.

தேசிய தலைநகர் டில்லியின் பசுமையை மேம்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முன்னிலையில் இந்த அனைத்து அதிகாரிகளின் கூட்டத்தை வனத்துறை செயலர் கூட்ட வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us