sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

/

மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : ஆக 05, 2024 07:47 PM

Google News

ADDED : ஆக 05, 2024 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகர்கஞ்ச்:ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய உயிர் பலி சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கும் டில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

டில்லி பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ராவ்வின் ஐ.ஏ.எஸ்., படிப்பு மைய கட்டடத்தின் அடித்தள வெள்ளத்தில் மூழ்கி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், 25, தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, 25, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நெவின் டெல்வின், 24 ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து நீதிகேட்டு பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையை நகர போலீசிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு மாற்றி, டில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

சமீபத்தில் தேசிய தலைநகரில் நடந்த சம்பவம் அனைவரின் கண்களையும் திறக்கும் வகையில் அமைந்துள்ளது.

பயிற்சி மையங்கள் மரண அறைகளாக மாறிவிட்டன. பாதுகாப்பு விதிகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான அடிப்படை விதிகளை முழுமையாக கடைபிடிக்கும் வரை பயிற்சி நிறுவனங்கள் ஆன்லைனில் செயல்படட்டும்.

பயிற்சி மையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயிற்சி மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன.

இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

தாமதமானாலும் வரவேற்கிறோம்!


உச்ச நீதிமன்றத்தின் இந்த தலையீட்டை அனைத்து மாணவர்களும் வரவேற்கின்றனர். இருப்பினும் உச்ச நீதிமன்றம் முன்பே விசாரணை நடத்தியிருக்க வேண்டும். பயிற்சி மையங்கள், டில்லி மாநகராட்சி பற்றியதல்ல எங்கள் கோரிக்கை, மாணவர்களின் அடிப்படை உரிமை பற்றியது. பயிற்சி மையங்களின் அலட்சியத்தால் இங்கு வரும் மாணவர்கள், தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.

ரவீஷ் ஆனந்த்

பயிற்சி மாணவர்

கடமை தவறினால்...


தொழில்நுட்ப ரீதியாக இது நிர்வாகத்தின் வேலை, நீதித்துறையின் வேலை அல்ல. ஆனால் நிர்வாக அதிகாரி, தன் கடமைகளை நிறைவேற்றத் தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை வந்தது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை நாங்கள் தாழ்மையுடன் வரவேற்கிறோம். மேலும் இது அதிகாரிகளை பொறுப்பேற்கச் செய்யும் மற்றும் எங்கள் குறைகளை விரைவில் தீர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பங்கஜ்,

மற்றொரு பயிற்சி மாணவர்.

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்


மூன்று பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பயிற்சி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தக் கோரி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் துவங்கி ஒரு வாரம் நிறைவடைந்ததையடுத்து, நேற்று முன் தினம் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தினர்.ஏராளமான மாணவர்கள் மெழுகுவர்த்தி அணிவகுத்து, ராவ் பயிற்சி மைய கட்டடத்தின் முன் அமர்ந்து, உயிரை இழந்த மாணவர்களை நினைவுகூர்ந்தனர்.அப்போது, “எங்கள் படிப்பு தடைபடுகிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்கள் போராட்டம் மற்ற மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை கொண்டு வரும்.
வேறு எந்த மாணவர்களும் இதுபோன்ற துயர சம்பவங்களில் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என, பயிற்சி மாணவர் ஒருவர் கூறினார்.“நீதி கிடைக்கும் வரை, எங்கள் பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம்,” என, போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us