ADDED : ஆக 22, 2024 03:00 AM

கொச்சி : லோக்சபா தேர்தலில், கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
திரைப்படங்களில் நடிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அனுமதி கேட்டேன்.
அப்போது, 'எத்தனை படங்களில் நடிக்க உள்ளீர்கள்' என, அவர் கேட்டார். '22 படங்கள்' என, பதிலளித்தேன். யோசித்தவர், பின் அனுமதி வழங்கப்படும் என்றார்.
ஒட்டக்கொம்பன் படத்தில் நடிப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அனுமதி வழங்கவில்லை.
அனுமதி வரவில்லை என்றாலும், செப்., 6ல் படப்பிடிப்பில் பங்கேற்பேன். படங்களில் நடிப்பதற்காக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், காப்பாற்றப்பட்டதாகவே நான் உணர்வேன். அமைச்சராக வேண்டும் என, நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.