சுர்புர் தொகுதி இடைத்தேர்தல் காங்., வேட்பாளர் அறிவிப்பு
சுர்புர் தொகுதி இடைத்தேர்தல் காங்., வேட்பாளர் அறிவிப்பு
ADDED : மார் 22, 2024 07:06 AM

யாத்கிர்: சுர்புர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக ராஜா வேணுகோபால் நாயக் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
யாத்கிர் சுர்புர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராஜா வெங்கடப்பா நாயக், 67. கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மே 7 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, ராஜா வேணுகோபால் நாயக் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் ராஜா வெங்கடப்பா நாயக்கின் மகன் ஆவார். ''கடந்த 20 ஆண்டுகளாக எனது தந்தையுடன் சேர்ந்து, அரசியலில் பயணம் செய்து உள்ளேன். சுர்புர் மக்கள் என்னை ஆதரிப்பர் என்று நம்பிக்கை உள்ளது,'' என்று, ராஜா வேணுகோபால் நாயக் கூறி உள்ளார்.
பா.ஜ., வேட்பாளராக ராஜு நாயக் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

