ADDED : செப் 09, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி : ருவாண்டா நாட்டின் துாதர் ஜாக்வுலின் முகன்ஜிரா, பெலகாவியின் சுவர்ண விதான்சவுதாவை சுற்றிப்பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவான்டா நாட்டு துாதர் ஜாக்வுலின், நேற்று பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவுக்கு வந்தார்.
அவரை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வரவேற்று அழைத்து சென்றார். சுவர்ண விதான் சவுதாவை சுற்றி காண்பித்தார்.
சுவர்ண விதான் சவுதாவின், சட்டசபை, மேல்சபை ஹால்கள், கமிட்டி ஹால், அமைச்சரவை ஹால் என, மற்ற பகுதிகளை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தார். இரு சபைகளின் பணிகள், அடுத்து நடக்கவுள்ள சட்டசபை குளிர்க்கால கூட்டம் குறித்தும், அவரிடம் விவரிக்கப்பட்டது.