ADDED : ஜூன் 17, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி, : ''எந்த கலைஞர்களாக இருந்தாலும், மக்களுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும். இல்லையென்றால் ரேணுகாசாமி கொலை போன்ற சம்பவங்கள் நடக்கும்,'' என கூடலசங்கமா பஞ்சமசாலி மடத்தின் பசவஜெய மிருதுஞ்ஜெய சுவாமிகள் தெரிவித்தார்.
பெலகாவி, அதானியில், நேற்று அவர் கூறியதாவது:
நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் போன்ற நடிகர்களை, நாம் வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும். திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் கலைஞர்கள், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும்.
இல்லையென்றால் ரேணுகாசாமி கொலை போன்ற சம்பவங்கள் நடக்கும்.
சட்டத்தின் முன், அனைவரும் சமம். ரேணுகாசாமி கொலை வழக்கில், குற்றவாளிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.