ADDED : ஏப் 21, 2024 06:32 AM
ஆன்மிகம்
லட்சார்ச்சனை, சண்டி மஹா யாகம்
l 64ம் ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை, சண்டி மஹாயாகம் நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: கணபதி ஹோமம், புண்யாகவசனம், ஆராதனை; காலை: அம்மன் பிரகார உற்சவம், பகல் 12:00 மணி மற்றும் இரவு 8:00 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.
பிரம்ம ரத உற்சவம்
l சோமேஸ்வரர் கோவில் பிரம்ம ரத உற்சவத்தை ஒட்டி தினமும் உற்சவங்கள் நடக்கிறது. நேரம்: இரவில் ராவணேஸ்வரா வாகன உற்சவம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு, பெங்களூரு.
பிரம்மோற்சவம்
l ஸ்ரீராமசந்திர சுவாமி பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி: ராமசந்திர சுவாமியின் பிரகார உற்சவம், இரவு 7:30 மணி: ராமசந்திர சுவாமியின் பிரகார உற்சவம், அஸ்வ வாகன பவனி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.
கும்பாபிஷேகம்
l புனராவர்த்தன ஜீரணோதாரண விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 8:00 மணி: தேவதானுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், மஹா கணபதி, மஹாலட்சுமி, நவக்கிரஹ ஹோமங்கள், கோ பூஜை, தன பூஜை; 11:00 மணி: பூர்ணாஹூதி, தீபாராதனை; மாலை 4:00 மணி: வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யஜமான ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், மண்டப பூஜை, முதல்கால யாகம், யந்திரஸ்தாபனம், ரத்தினஸ்தாபனம், விக்கிரஹ ஸ்தாபனம், அஷ்டபந்தனம்; இரவு 8:30 மணி: பூர்ணாஹூதி, தீபாராதனை. இடம்: சுந்தர சுவாமி மடம், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.
l நேரம்: காலை 9:00 மணி முதல் 9:35 மணி வரை: ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்; பகல் 12:00 மணி: பக்தர்களுக்கு அன்னதானம். இடம்: முத்தியாலம்மா தேவி கோவில், ெஷப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.
l நேரம்: காலை 9:00 மணி முதல்11:30 மணிவரை விக்னேஸ்வர பூஜை; புண்ணியாஹ வாசனம்; இரண்டாம் கால யாகபூஜை; திரவியாஹூதி; பூர்ணா ஹூதி; தீபாராதனை; பிரசாதம் வழங்குதல்.
l சந்த்ர ஹோரையில் யந்த்ர ஸ்தாபனம்; மற்றும் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல்; மாலை 6:05 மணி முதல் இரவு 8:30 மணி வரை விக்னேஸ்வர பூஜை; புண்ணியாஹ வாசனம்; மூன்றாம் கால யாக பூஜை; திரவியாஹுதி; பூர்ணாஹுதி; தீபாராதனை; பிரசாதம் வழங்குதல். இடம்: சக்தி மாரியம்மன் கோவில், கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர்ட் சன் பேட்டை.
பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா, பெங்களூரு.
l மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 8:00 மணி முதல் 9:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
