ஆன்மிகம்
லட்சார்ச்சனை, சண்டி மஹா யாகம்
64ம் ஆண்டு சண்டி மஹாயாகம் நடக்கிறது. நேரம்: காலை 8:00 மணி: கணபதி பூஜை, புண்யாஹவசனம், சங்கல்பம், கலச ஸ்தாபனம்; 8:30 மணி: மஹா சண்டி யாகம் துவக்கம்; பகல் 12:00 மணி: பூர்ணாஹூதி; 12:30 மணி: தீபாராதனை; 1:00 மணி: அன்னதானம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.
பிரம்ம ரத உற்சவம்
சோமேஸ்வரர் கோவில் பிரம்ம ரத உற்சவத்தை ஒட்டி தினமும் உற்சவங்கள் நடக்கிறது. நேரம்: காலை 11:00 மணி: பிரம்ம ரத உற்சவம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு, பெங்களூரு.
பிரம்மோற்சவம்
ஸ்ரீராமசந்திர சுவாமி பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி: ராமசந்திர சுவாமிகளுக்கு அஸ்தனம்; மாலை 5:0 0மணி: சித்ரா பவுர்ணமி அஸ்தனம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.
திருநட்சத்திர விழா
நம்மாழ்வார் சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர விழா நடக்கிறது. நேரம்: காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை: ஸ்ரீமன் நாராயணாவுக்கு அபிேஷகம்; மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: பிரபானந்தம் சேவை காலம், சாத்துமுரை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: பான் பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு, பெங்களூரு.
சித்ரா பவுர்ணமி
சித்ராபவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படுகிறது. நேரம்: மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை; வராஹி ஹோமம்; சண்டி ஹோமம்; 5:00 மணி முதல் 6:00 மணி வரை: வராஹி அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை: தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: வராஹி சாமுண்டீஸ்வரி தேவி கோவில், சாமுண்டி நகர், ராஜாஜி நகர், பெங்களூரு.
* நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: பால் அபிேஷகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.
* நேரம்: காலை: பக்தர்கள் கையால் அம்மனுக்கு பால் அபிேஷகம், சுமங்கலி பூஜை. இடம்: ஓம் சக்தி கோவில், ஆறாவது பிரதான சாலை, கல்யாண் நகர், பெங்களூரு.
* நேரம்: காலை 10:35 மணி: சிறப்பு ஹோமம், பூர்ணாஹூதி, அன்னதானம். இடம்: ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீடம், ஜீவன் பீமா நகர், பெங்களூரு.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

