ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
ஸ்ரீமத் நம்மாழ்வார் 143வது பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை: தேவநாதன் சுவாமிகள் முன்னிலையில் நாலாயிர திவ்யபிரபந்த சேவா காலம், ததியாராதனை; மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை: அகில ஸ்ரீ வைஷ்ணவ பாகவத சுவாமிகளும், ஆண்டாள் கோஷ்டிகளால் திருவாய்மொழி பண்ணிசை. இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு, பெங்களூரு.
நரசிம்ம ஜெயந்தி மற்றும் நம்மாழ்வார் திருநட்சத்திரம்
நரசிம்ம ஜெயந்தி மற்றும் நம்மாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: பான்பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திர், ஹலசூரு, பெங்களூரு.
லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி
லட்சுமி நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 5:30 மணி: தேவதனுக்ரா, விஸ்வசேன ஆராதனை, பகவத் வாசுதேவ புண்யாஹ, ரக் ஷா பந்தன், அங்குரார்ப்பணம், கலச ஆராதனை, நைவேத்தியம், மங்களாரத்தி, சாத்துமுறை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 14வது பிரதான சாலை, இந்திரா நகர்.
நேரம்: காலை 9:00 மணி லட்சார்ச்சனை. மதியம் 12:00 மணி: தீபாராதனை, மாலை 6:00 மணி: லட்சார்ச்சனை, இரவு 8:00 மணி: தீபாராதனை இடம்: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ஓ.பி.எச்., சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
ரத உற்சவம்
நேரம்: காலை முதல் பக்தர்கள் மாவிளக்கு நேர்த்தி கடன் செலுத்துதல். இடம்: முத்தியாலம்மன் தேவி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
கோடை பயிற்சி
பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.
இசை
மார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
ஹார்டு ராக் கேப் வழங்கும் கிரானிக் புளூஸ் சர்கஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு.
காமெடி
அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப் வழங்கும் 'கிரவுண்டெட் காமெடி நைட்'. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

