தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு


ADDED : மே 29, 2024 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

குருபூஜை

பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் ஞானசபை சார்பில் 95ம் ஆண்டு குரு பூஜை. நேரம்: மாலை 4:00 மணி: திருப்புகழ் அன்பர்கள் பஜனை; இரவு 7:00 மணி: ஆறுகால பூஜை, சகஸ்ர நாம அர்ச்சனை; ஸ்ரீவள்ளி தேவசேனா திருப்புகழ் மாதர் சங்கத்தின் பஜனை, பெரிய புராண ஆசிரியர் நீலமேகத்தின் பாம்பன் சுவாமி புராணம்; ஓம் பாஞ்சாலி பக்தானந்த திருப்புகழ் சபை அன்பர்கள், சிதம்பர ஜோதி ராமலிங்க அடிகள் சமரச வேத அருட்பா பிரசார சங்கம், ஹலசூரு ஆனந்த முருகன் அடிமை திருப்புகழ் அனந்த நாராயணன் மற்றும் திருப்புகழ் செம்மணி சுந்தரேசன் குழுவினரால் திருப்புகழ் இசை வழிபாடு. இடம்: மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு, பெங்களூரு.

பொது

வேலைவாய்ப்பு திருவிழா

பெங்களூரில் பாக்ஸ்கான் ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலைக்கு கார்பென்டர், கொத்தனார், பிட்டர், எலக்ட்ரிஷியன், வெல்டர், சூப்பர் வைசர், உதவியாளர் பணிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க நேர்முக தேர்வு. நேரம்: காலை 10:00 மணி முதல் பகல் 1:30 மணி வரை. இடம்: மொய்து கல்யாண மண்டபம், தங்கவயல்.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி

ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை

மார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.

காமெடி

பிளாக்பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, பெங்களூரு.

* தமாஷா கபே வழங்கும் ஜஸ்ட் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தமாஷா கபே, 483, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

* ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.

* காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

* பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் 'ஜோக்ஸ் இன் பிராகிரஸ்'. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

* டேக் காமெடி கிளப் வழங்கும் 'டெய்லி பன்னிஸ்'. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us