தாகூர் தன் கையால் எழுதிய ஜன..கன...மன...கடிதம்: இணையத்தில் வைரல்
தாகூர் தன் கையால் எழுதிய ஜன..கன...மன...கடிதம்: இணையத்தில் வைரல்
ADDED : ஆக 15, 2024 06:34 PM

புதுடில்லி: நம் தேசிய கீதமான ஜன...கன..மன.. பாடலை எழுதிய வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன.கன.மன.. பாடல் இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. இதனை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் விழாக்களில் இந்திய தேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் எழுதிய ஜன.கன.மன... ஆங்கில கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வங்க மொழியில் இருந்து ‛தி மார்னிங் சாங் ஆப் இந்தியா ' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இப்பாடலை ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதம் நோபல் பரிசு அமைப்பின் ‛எக்ஸ்' தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.