வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: 'நிடி ஆயோக்' அறிக்கை
வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: 'நிடி ஆயோக்' அறிக்கை
ADDED : ஜூலை 13, 2024 04:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என நிடி ஆயோக் தெரிவித்துள்ளது.
இது குறித்து 'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 78 புள்ளிகளுடன் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது. வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 16 இலக்குகளில் 15 இலக்குகளில் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்று front Runner பிரிவில் தமிழகம் இடம்பிடித்துள்ளது.
தரமான கல்வி இலக்கில் 76 புள்ளிகளுடன் தமிழகம் 4ம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.