ADDED : மே 07, 2024 06:33 AM

எலக்ட்ரானிக் சிட்டி: டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததால், அதில் இருந்த பெட்ரோல் ஆறாக ஓடியது.
மங்களூரில் இருந்து பெங்களூருக்கு, நேற்று முன்தினம் பெட்ரோல் டேங்கர் லாரி வந்தது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தறிகெட்டு ஓடியது. சாலை தடுப்பு கம்பியின் மீது மோதி கவிழ்ந்தது. டேங்கரின் மூடிகள் திறந்ததால், டேங்கருக்குள் இருந்த பெட்ரோல் சாலையில் ஆறாக ஓட ஆரம்பித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்டு, அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், சாலையில் ஆறாக ஓடிய பெட்ரோல் மீது, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
பின்னர் பெட்ரோல் கொட்டிய இடம் முழுதும் சுத்தப்படுத்தப்பட்டது. கிரேன் மூலம், சாலையில் கவிழ்ந்த லாரி துாக்கி நிறுத்தப்பட்டது. காயம் அடைந்த டிரைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.