ADDED : செப் 05, 2024 03:52 AM
பெங்களூரு : பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டது. தொண்டர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக், இலக்கு நிர்ணயித்தார்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தின் பா.ஜ., அலுவலகத்தில், மாநில தலைவர் விஜயேந்திரா உறுப்பினர்கள் சேர்க்கையை, நேற்று துவக்கி வைத்தார். இதில், எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியதாவது:
இம்முறை தேர்தலில், பா.ஜ.,வுக்கு எவ்வளவு ஓட்டுகள் வந்ததோ, அதில் 75 சதவீதம் மக்களை, கட்சியில் உறுப்பினர்களாக்க வேண்டும். பா.ஜ., இலவசமாக உறுப்பினர்களை சேர்க்கிறது. பா.ஜ.,வின் உயிர் தொண்டர்களிடம் உள்ளது.
காங்கிரசாருக்கு உறுப்பினர்கள் எவ்வளவு உள்ளனர் என்பது முக்கியம் அல்ல. அவர்களின் குடும்பமே முக்கியம். காங்கிரஸ் தலைவர்கள் அடிப்படையிலானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பா.ஜ., துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது:
தொண்டர்களே எங்கள் கட்சியின் அஸ்திவாரம். நாட்டின் நலனுக்காக பணியாற்றும் கட்சியாகும். காங்கிரஸ் ஒரு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட கட்சியாகும். குடும்பம் முதலில், கட்சி இரண்டாவது, நாடு இறுதியில், இதுவே காங்கிரசின் கொள்கை.
காங்கிரஸ் ஊழலில் மூழ்கியுள்ளது. மூடா உட்பட, பல ஊழல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ், ஆட்சி நடத்த தகுதியானது அல்ல. முதல்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். விஜயேந்திரா தலைவரான பின், கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.