ADDED : மே 26, 2024 06:52 AM

கர்நாடக மேலவையில் கர்நாடக வடகிழக்கு பட்டதாரி, பெங்களூரு பட்டதாரி, கர்நாடக வடமேற்கு பட்டதாரி, கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதிகளின் எம்.எல்.சி.,க்களாக இருப்பவர்கள் பதவிக்காலம், அடுத்த மாதம் 21 ம் தேதியுடன் முடிகிறது.
புதியவர்களை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 3 ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, தேர்தல் நடக்கிறது. முடிவுகள் 6 ம் தேதி வெளியாகின்றன. ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை பேர், அவர்கள் பற்றிய விபரம், வாக்காளர்களை பற்றி பார்க்கலாம்.
வேட்பாளர்கள் யார், யார்?
தொகுதி காங்கிரஸ் பா.ஜ., கூட்டணி
கர்நாடக வடகிழக்கு பட்டதாரி சந்திரசேகர் பாட்டீல் அமர்நாத் பாட்டீல்
கர்நாடக தென்மேற்கு பட்டதாரி ஆயனுார் மஞ்சுநாத் தனஞ்ஜெய் சார்ஜி
பெங்களூரு பட்டதாரி ஏ.தேவகவுடா ராமோஜிகவுடா
கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் சீனிவாஸ் நாராயணசாமி
கர்நாடக தென்மேற்கு ஆசிரியர் மஞ்சுநாத்குமார் போஜேகவுடா
கர்நாடக தெற்கு ஆசிரியர் மரிதிப்பேகவுடா விவேகானந்தா
==============
களத்தில் எத்தனை பேர்?
தேர்தல் நடக்கும் ஆறு தொகுதிகளிலும், காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 78 பேர் களத்தில் உள்ளனர். இதில் 77 பேர் ஆண் வேட்பாளர்கள், ஒருவர் பெண். ஆறு தொகுதிகளில் மனு தாக்கல் செய்த 12 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்று உள்ளனர்.
=======
தொகுதிக்கு உட்பட்டு வரும் மாவட்டங்கள்
தொகுதி மாவட்டங்கள்
கர்நாடக வடகிழக்கு பட்டதாரி கலபுரகி, பீதர், ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி, யாத்கிர், விஜயநகரா
கர்நாடக தென்மேற்கு பட்டதாரி தாவணகெரே, ஷிவமொகா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு
பெங்களூரு பட்டதாரி பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், ராம்நகர்
கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் சித்ரதுர்கா, தாவணகெரே, துமகூரு, சிக்கபல்லாப்பூர், கோலார்
கர்நாடக தென்மேற்கு ஆசிரியர் தாவணகெரே, ஷிவமொகா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு.
கர்நாடக தெற்கு ஆசிரியர் மாண்டியா, ஹாசன், மைசூரு, சாம்ராஜ்நகர்.
===========
வாக்காளர்கள் எத்தனை பேர்?
பட்டதாரி தொகுதியின் வாக்காளர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆவர். ஆசிரியர் தொகுதியில் வாக்காளர்கள் அரசு, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆவர்.
தொகுதி வாரியாக தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம்:
தொகுதி: கர்நாடக வடகிழக்கு பட்டதாரி
மாவட்டம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஓட்டுச்சாவடி
கலபுரகி 22,688 15,826 5 38,519 47
பீதர் 16,622 10,614 0 26,786 33
ராய்ச்சூர் 13,581 6,731 5 20,317 29
கொப்பால் 9,162 4,581 0 13,743 24
பல்லாரி 14,981 9,198 4 24,183 24
யாத்கிர் 10,192 4,647 3 14,842 16
விஜயநகரா 11,985 6,336 2 18,233 21
இந்த ஏழு தொகுதிகளிலும் 1,56,623 பேர் ஓட்டுபோட உள்ளனர்.
தொகுதி: கர்நாடக தென்மேற்கு பட்டதாரி
மாவட்டம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஓட்டுச்சாவடி
தாவணகெரே 4,288 2,270 0 6,558 08
ஷிவமொகா 15,578 11,834 1 27,413 38
உடுப்பி 7,857 9,176 0 17,033 19
சிக்கமகளூரு 5,923 4,283 0 10,206 13
தட்சிண கன்னடா 8,375 11,596 0 19,971 24
குடகு 1,699 2,210 0 3,909 06
இந்த ஆறு தொகுதிகளிலும் 85,090 பேர் ஓட்டுபோட உள்ளனர்.
தொகுதி: பெங்களூரு பட்டதாரி
மாவட்டம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஓட்டுச்சாவடி
பெங்களூரு ரூரல் 10,242 8,884 0 19,126 25
ராம்நகர் 10,144 8,849 4 18,997 28
பெங்., சென்ட்ரல் 5,377 6,699 1 12,077 20
பெங்., வடக்கு 7,726 10,178 1 17,905 22
பெங்., தெற்கு 7,332 8,601 1 15,934 17
பெங்., நகரம் 17,970 19,844 7 37,821 47
இந்த ஆறு தொகுதியிலும் 1,21,860 பேர் ஓட்டுபோட தகுதியானவர்கள்.
தொகுதி: கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர்
மாவட்டம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஓட்டுச்சாவடி
சித்ரதுர்கா 3,442 1,471 0 4,913 07
தாவணகெரே 2,795 1,556 0 4,351 07
துமகூரு 4,964 2,761 0 7,725 16
சிக்கபல்லாப்பூர் 2,227 1,543 0 3,770 10
கோலார் 2,392 2,158 0 4,550 07
இந்த 5 தொகுதியிலும் 25,309 ஆசிரியர்கள் ஓட்டுபோட தகுதி படைத்தவர்கள்.
தொகுதி: கர்நாடக தென்மேற்கு ஆசிரியர்
மாவட்டம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஓட்டுச்சாவடி
தாவணகெரே 726 253 0 979 04
ஷிவமொகா 2,558 1,807 0 4,365 32
உடுப்பி 1,717 2,350 0 4,067 10
சிக்கமகளூரு 2,293 1,931 0 4,224 12
தட்சிண கன்னடா 2,650 5,539 0 8,819 16
குடகு 543 1,035 0 1,578 05
இந்த 6 தொகுதியிலும் 23,402 ஆசிரியர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள்.
தொகுதி: கர்நாடக தெற்கு ஆசிரியர்
மாவட்டம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஓட்டுச்சாவடி
மாண்டியா 3,127 2,276 0 5,403 09
ஹாசன் 2,085 1,441 0 3,526 10
மைசூரு 5,338 5,100 1 10,439 20
சாம்ராஜ்நகர் 1,448 733 0 2,181 05
இந்த 4 தொகுதியிலும் 21,549 ஆசிரியர்கள் ஓட்டுபோட தகுதியானவர்கள்.
==========
ஓட்டுபோட எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்
ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஊழியர் அடையாள அட்டை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, பட்டப்படிப்பு படித்தற்கான கல்லுாரிகள் மூலம் கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள். இதில் ஏதாவது ஒன்றை எடுத்து வரலாம்.
=========
வேட்பாளர்கள் சொத்து விபரம்:
10 ம் வகுப்பு படித்தவர் ரூ.118 கோடிக்கு சொந்தகாரர்
தொகுதி: கர்நாடக வடகிழக்கு பட்டதாரி
* காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகர் பாட்டீல், 54: 11 கோடியே 1 லட்சத்து 27, 159 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளது. எம்.பி.பி.எஸ்.,
* பா.ஜ., வேட்பாளர் அமர்நாத் பாட்டீல், 52: 3 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 275 ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளது. பி.காம்., பட்டதாரி.
---------
தொகுதி: கர்நாடக தென்மேற்கு பட்டதாரி
* காங்கிரஸ் வேட்பாளர் ஆயனுார் மஞ்சுநாத், 69: பி.ஏ., பட்டதாரி. இவருக்கு 3 கோடியே 27 லட்சத்து 66 ஆயிரத்து 859 ரூபாய்க்கு சொத்து உள்ளது.
* பா.ஜ., வேட்பாளர் தனஞ்ஜெய் சார்ஜி, 44: எம்.பி.பி.எஸ்., இவருக்கு 38 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 057 ரூபாய் சொத்து உள்ளது.
* பா.ஜ., அதிருப்தி சுயேச்சை வேட்பாளர் ரகுபதி பட், 54: எம்.ஏ., முதுகலை பட்டதாரி. இவர் பெயரில் 17 கோடியே 95 லட்சத்து 80 ஆயிரத்து 61 ரூபாய் சொத்து உள்ளது.
--------------
தொகுதி: பெங்களூரு பட்டதாரி
* காங்கிரஸ் வேட்பாளர் ராமோஜி கவுடா, 50: எம்.ஏ., தொழில் அதிபர். இவருக்கு 45 கோடியே 42 லட்சத்து 2,113 ரூபாய்க்கு சொத்து உள்ளது.
* பா.ஜ., வேட்பாளர் ஏ.தேவகவுடா, 68. எம்.ஏ., பொலிடிக்கல் சயின்ஸ். ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சிட்டிங் எம்.எல்.சி., இவரிடம் 1 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரத்து 244 ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது.
----------------
தொகுதி: தென்கிழக்கு ஆசிரியர்
* காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ், 58. இன்ஜினியர். கல்வி நிறுவனம் நடத்துகிறார். இவருக்கு 28 கோடியே 97 லட்சத்து 50,447 ரூபாய் சொத்து உள்ளது.
* பா.ஜ., வேட்பாளர் நாராயணசாமி, 59. இன்ஜினியர். சிட்டிங் எம்.எல்.சி., இவர் பெயரில் 18 கோடியே 69 லட்சத்து 80,877 ரூபாய் சொத்து உள்ளது.
-----------------
தொகுதி: தெற்கு ஆசிரியர்
* காங்கிரஸ் வேட்பாளர் மரிதிப்பேகவுடா, 65. எம்.ஏ., வரலாறு. இவரிடம் 4 கோடியே 28 லட்சத்து 98 ஆயிரத்து 256 ரூபாய் சொத்து உள்ளது.
* ம.ஜ.த., வேட்பாளர் விவேகானந்தா, 47. பத்தாம் வகுப்பு. தொழில் அதிபரான இவரிடம் 117 கோடியே 94 லட்சத்து 826 ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது.
--------------
தொகுதி: தென்மேற்கு ஆசிரியர்
* காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத்குமார், 54. எம்.எஸ்.சி., - பி.எச்.டி., படித்து உள்ளார். தொழில் அதிபர். இவரிடம் 12 கோடியே 50 லட்சத்து 40 ஆயிரத்து 850 ரூபாய்க்கு சொத்து உள்ளது.
* ம.ஜ.த., வேட்பாளர், போஜேகவுடா, 67. பி.எஸ்.சி., - எல்.எல்.பி., சிட்டிங் எம்.எல்.சி., இவரிடம் 18 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 653 ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது.
இவர்கள் அனைவரும் தாக்கல் செய்த வேட்புமனுவில், தங்கள் மீது கிரிமினல் வழக்கு இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
- நமது நிருபர் -