ADDED : மே 02, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கர்புரா: பெங்களூரு சங்கரபுராவில் வசிப்பவர் ஹர்ஷித்குமார், 24. இவருக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இவ்விஷயம் இளம்பெண்ணின் காதலன் சஷாங்க், 24 க்கு தெரிந்தது. காதலிக்கு குறுந்தகவல் அனுப்ப கூடாது; அவருடன் பேசக்கூடாது என்று, ஹர்ஷித்குமாரை எச்சரித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு ஹர்ஷித்குமார் நடத்தி வரும், மலர்களை அலங்கரிக்கும் கடைக்கு சென்ற சஷாங்க், அவரது நண்பர் சந்தன், 24 ஆகியோர், ஹர்ஷித்குமாரின் தோள்பட்டையில் கத்தியால் வெட்டினர்.
தடுக்க முயன்ற போது, இடது கை விரலில் வெட்டு விழுந்து விரல் துண்டானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சஷாங்க், சந்தன் கைது செய்யப்பட்டனர்.

