ADDED : பிப் 25, 2025 12:35 AM

மைக்கோ லே - அவுட்,
ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு, திருமணமான வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, மைக்கோ லே - அவுட்டை சேர்ந்த 17 வயது சிறுமி, தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான விக்கி, 29, என்பவரை, கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். தனக்கு திருமணம் ஆன விஷயத்தை மறைத்துவிட்டு, சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
விக்கியின் தொல்லை தாங்க முடியாத சிறுமி, தன் தாயாரிடம் கூறி உள்ளார். இது குறித்து, கடந்த ஆண்டு பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் தாயும், மகளும் புகார் செய்தனர். அங்கு இருந்த, போலீஸ் ஏட்டு அருண், உதவி செய்வதாக நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.
இதன் பிறகு, கடந்த டிசம்பரில் சிறுமியை விசாரிப்பதாக கூறி, பி.டி.எம்., லே - அவுட்டில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து சென்றார். மயக்க மருந்து கலந்த பானத்தை சிறுமிக்கு குடிக்க கொடுத்தார். மயக்கம் அடைந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தார். இதை தன் மொபைலில் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது பற்றி வெளியே சொன்னால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறி மிரட்டினார். சிறுமி பீதி அடைந்தார். இதுபற்றி தன் வீட்டில் தெரிவித்து உள்ளார். சம்பவம் குறித்து, பி.டி.எம்., லே - அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், அருண், விக்கி ஆகியோரை கைது செய்தனர்.
இச்சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.