ADDED : ஜூலை 10, 2024 08:44 PM

பாலக்காடு:பாலக்காடு அருகே, நெல்லியாம்பதி நீர்வீழ்ச்சியில், கால் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் எத்தன்னூர் பகுதியை சேர்ந்த சுந்தரனின் மகன் சுரேஷ், 26. வெல்டிங் தொழிலாளியான இவர், நேற்று நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பிரதீஷ், ரஞ்சித், அபிலாஷ் ஆகியோருடன் நெல்லியாம்பதி வனப்பகுதிக்கு சென்றார்.
அங்குள்ள, வெள்ளரிமேடு நீர்வீழ்ச்சியை பார்க்க சென்றனர். அப்போது, திடீரென கால் தவறி நீர்வீழ்ச்சியில் சுரேஷ் விழுந்தார். உடன் சென்ற நண்பர்கள், கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அறிவித்தனர்.
போலீசார் கொடுத்த தகவலின் பேரில், கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய அதிகாரி அர்ஜுன் தலைமையிலான, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுரேஷ் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின், இறந்த நிலையில், காயங்களுடன் சுரேஷின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து, கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.