ADDED : மார் 11, 2025 11:04 PM
தங்கவயல்; தங்கவயல் நகராட்சியில் பல பணிகளுக்கு இன்று டெண்டர் விடப்படுகிறது.
தங்கவயல் நகராட்சியில் எம்.ஜி., மார்க்கெட் நடைபாதைகளில் கடை நடத்துவோரிடம் தினமும் நில வாடகை.
எம்.ஜி.மார்க்கெட்டுக்குள் காய்கறிகள், பழங்கள் கொண்டு செல்வது.
நகராட்சி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம்.
நகராட்சி பஸ் நிலையத்தில் நுழையும் தனியார் பஸ்கள்.
ராபர்ட்சன்பேட்டை கசாப்பு நிலையத்தில் ஆடுகள் வெட்டுதல்.
ராபர்ட்சன்பேட்டை கசாப்பு நிலையத்தில் உரம் பெறுதல்.
ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டில் நடைபாதையில் கடை நடத்த நில வாடகை.
ஆண்டர்சன்பேட்டை பண்டாரம் லைன் கசாப்பு நிலையத்தில் ரத்தம், எலும்பு சேகரிப்பு.
ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் ஆண், பெண் கட்டண கழிப்பறை ஏலம்.
பழைய பொருட்கள், பழைய நாளிதழ்கள் விற்பனை.
மேற்கண்ட பணிகளுக்கு தங்கவயல் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 11:00 மணிக்கு டெண்டர் விடப்படுகிறது. இந்த டெண்டர், ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான காலமாகும்.