ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை
ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 13, 2024 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரெய்சியில் சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக 50 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரெய்சியில் கடந்த 9ம் தேதி, சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் பலியாகினர்; 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.