தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நேஹாவை கொன்ற பயாஸுக்கு பரிசோதனை

நேஹாவை கொன்ற பயாஸுக்கு பரிசோதனை

நேஹாவை கொன்ற பயாஸுக்கு பரிசோதனை


ADDED : ஏப் 29, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி : கல்லுாரி மாணவி நேஹாவை கொன்ற, பயாஸுக்கு ரத்த பரிசோதனை நடந்தது.

ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன். இவரது மகள் நேஹா, 22. கடந்த 18 ம் தேதி கல்லுாரி வளாகத்தில், நேஹாவை, பயாஸ், 22 என்பவர் கத்தியால் குத்தி கொன்றார்.

பயாஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். கொலை நடந்த இடத்திற்கு அழைத்து சென்று, பயாஸிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நேஹாவை கொன்ற போது, பயாஸ் அணிந்திருந்த சட்டையில், ரத்த கறை படிந்திருந்தது. அந்த சட்டையை ஆதாரமாக, போலீசார் சேகரித்து உள்ளனர். ஆய்வகத்திற்கும் ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பயாஸுக்கு நேற்று ரத்த பரிசோதனை நடந்தது. பரிசோதனை அறிக்கையில் வரும் ரத்த மாதிரியும், ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரத்த மாதிரியும், ஒரே ரத்த வகையை சேர்ந்ததா என்றும், ஆய்வு நடக்க உள்ளது.

பயாஸின் ஆறு நாள் காவல், இன்னும் இரண்டு நாட்களில் முடிய உள்ளது. இதனால் அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us