ADDED : டிச 09, 2024 06:45 AM
வசூல் தொகை?
ஒட்டுமொத்த நகரமே ஆதரித்த போராட்டத்துக்கு தொழிலாளிகளே கொடுத்தது 39 லட்சம் ரூபாயாம். இதுல 5 லட்சம் லாயர் பீஸ் கொடுத்தாங்களாம். மீதி 34 லட்சம் ரூபாய் கையிருப்பு இருக்கணுமாம்.
இது மட்டும் இல்ல; பந்தல் வசூல் வேறு தனி. இது 'ஜோக்' கதை அல்ல. இதை சொன்னவரு பொறுப்பான தலைவரு. இது சிகப்பு உண்டியலுக்கு போய் சேர்ந்திடுச்சோன்னு பலருக்கு சந்தேகம் வந்திருக்கு.
இது பொய்யோ; மெய்யோ. இது பத்தி வசூல் நடத்திய, சம்பந்தப்பட்டவங்க பதில் சொல்ல வாயே திறக்கல.
இவங்க அமைதியா இருந்தா, என்ன அர்த்தமுன்னு ஒரு தரப்பில் கேட்குறாங்க. வசூல் ஆச்சா... இல்லையா சொல்ல வேண்டியது தானே. 9ம் தேதி நடக்கிற கன்சுலேஷன், அது பேரம் நடத்துற கண் துடைப்பு கூட்டமாம்.
'பெர்மனென்ட்' கதையை மூடி மறைக்க அண்டர்கிரவுண்ட் வேலையும் நடக்குதுன்னு நீல வட்டாரத்தில் தகவல் பரவி வருது.
கெடுத்துக்க வேண்டாம்!
கை கட்சியில் கட்சிக்காரர்களை விட அந்த கட்சியின் முனிசி., உறுப்பினர்களுக்கு தான் தனி மரியாதை. இந்த ஆட்டமும், ஓட்டமும் அவங்களோட பதவி இருக்கிற வரைக்கும் தான்னு விசுவாசிகள் குமுறிக்கிட்டு இருந்தாங்க.
அவர்களோட பதவிக் காலம் இருக்கும் போதே முனிசி.,யில் நடக்கிற ஊழலை புட்டு புட்டு வெச்சிட்டாங்க. லோக் ஆயுக்தாவில் புகார் செய்வதாக 'டோஸ்' கொடுத்தாங்க.
'மாஜி' தலைவரை பார்த்து, மரியாதையுடன் உரிய பதவி கொடுத்தேன்; அந்த மரியாதையை கெடுத்துக்க வேணாம்னு சொல்லி அசெம்பிளி மேடம் கோபத்தால் மைக்கை எறிந்து விட்டு, வேகமாக நடையை கட்டிட்டாங்க. உட்கட்சியில் இத்தனை குழப்பமா?
'கோல்மால்' எவ்வளவு?
வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனைகள் வழங்குவதாக 35 வார்டுகளிலும் 10 ஆயிரம் விண்ணப்பங்களை முனிசி.,யில் வாங்கினாங்க. மூட்டையாக கட்டி வெச்சாங்க.
அது என்னானது; எங்கே போனதென பலரு துருவினாங்க. விண்ணப்பங்களில் 1,000 தான் அக்செப்ட்; மத்தவை ரிஜெக்டட். எதனால ரிஜெக்ட் ஆச்சுன்னு விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கல. 1,000 மனைகளில் ஆபீசர்களுக்கும், வார்டு கவுன்சிலர்களுக்கும் தலா எத்தனை; ஒரு வார்டில் எத்தனை. இது பல்வேறு சந்தேகத்தை எழுப்பி இருக்குது.
இதுக்காக அரசு நிலம் 16 ஏக்கர் ஒதுக்கி இருப்பதாக சொல்றாங்க. சகல வசதியோடு வீடுகள் கட்டித்தர போறாங்களாம். இதில் எவ்வளவு 'கோல்மால்' நடக்க போகுதோ?
அவமானம் தேவையா?
முனிசி., கவுன்சில் கூட்டத்தில் நியமன உறுப்பினர் பேச அனுமதி இருக்குதா; இல்லையா. அதிலும் வார்டுகள் பிரச்னை பற்றி பேசலாமா என்ற சர்ச்சையால் ஒரு நியமன உறுப்பினரை பேச விடாமல், கைக்கார கவுன்சிலர்களே அடக்கி அமர வெச்சிட்டாங்க.
அதிலும், அந்த பதவியை பெற அவரு, சி.எம்., அரசியல் செக்ரட்டரி சிபாரிசுன்னு வேற சொல்றாரு. அதுக்கு அப்புறம், பதவி இருந்தால் என்ன; இல்லாமல் போனால் என்ன. இந்த அவமானம் தேவையான்னு, நிழற் கண்ணாடி முன் நின்னு, தனக்கு தானே கேட்டுக்க வேண்டியது தான். நியமன உறுப்பினர்களுக்கு யார் மீது மனஸ்தாபமோ?