sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட் -

/

தங்கவயல் செக்போஸ்ட் -

தங்கவயல் செக்போஸ்ட் -

தங்கவயல் செக்போஸ்ட் -


ADDED : செப் 14, 2024 11:32 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*தொடரும் ஊழல் பட்டியல்


கை கட்சி அசெம்பிளி காரர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பூ கட்சியின் 'மாஜி' அசெம்பிளிக்காரர் அடுக்கினார். இது சிட்டிக்குள் வைரலானது.

கை அசெம்பிளிக்காரர், அவருக்கு நெருக்கமானவரின் பினாமி பெயரில், 5 கோடி ரூபாய்க்கு தெரு மின் விளக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததாகவும், இதில் முறைகேடு நடந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

முறைகேடாக கிரானைட்டை பல 'சி' க்கு விற்றதாக புட்டு புட்டு வெச்சாரு. அப்படியெல்லாம் தப்பே நடக்கலன்னு, அசெம்பிளிக்காரருக்கு ஆதரவாக ஒருத்தரும் வக்காலத்து வாங்கல. அவரோட ஆதரவாளர்களும் 'அம்மா' மீது வெறுப்பில் இருக்காங்களாம்.

அவரின் விசுவாசிகளாக, அடையாளப்படுத்திக் கொண்டவங்களும் மவுனம் சாதிக்கிறாங்களாம்.

ஊழல் பட்டியல் இருக்குதாம். அதை மெல்ல கசிய விடுவதாக சொல்றாங்க.

***

*திடீர் கடைகள் உற்பத்தி


எம்.ஜி.மார்க்கெட்டில் கட்டடமே இல்லாமல் இரும்பு ஆங்கிள்கள், தகரங்கள், ஷட்டர்கள் மூலம் முனிசி., கவனத்திற்கு வராமலேயே, 'திடீர் கடைகள்' முளைச்சிருக்கு.

இப்படி தான், முனிசி., கடைகள் மீது அடுக்கு மாடி கடைகளை சிலர் உருவாக்கினர். இடம் மட்டும் தான் முனிசி.,க்குள்ளது; கட்டடம் எங்களுக்கு உள்ளது என வியாக்கியானம் பேசுறாங்க.

கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, கட்ட வேண்டியதை கட்டினாங்கன்னு விபரம் அறிஞ்ச தகவல் வெளியே வந்திருக்குது.

இந்த மாதிரி வேலைகளுக்கு ஆபிசர்கள் துணை போவதாக, மாவட்ட கலெக்டர் வரை படங்களுடன் புகார் போயிருக்கு. ஜல்லி, மணல் கொட்டினால் தானே பிரச்னை; டபுள் கடை உருவாக்க இந்த ஐடியா நல்லா இருக்கேன்னு பப்ளிக் கிண்டல் பண்றாங்க.

***

*இதுவும் தலைமுறை


கர்நாடக மாநில முதல் சி.எம்., வாழ்ந்த இடத்தில், 10 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் கட்டுவதாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவிச்சது; நிதியும் ஒதுக்கியதாக சொன்னாங்க.

எங்கே அந்த நினைவு மண்டபம். அதற்கு ஒதுக்கிய தொகை எங்கே போனது. இது பற்றி மூத்த அரசியல் தலைவர், நீட்டி முழக்கினாரு. சொன்ன வார்த்தையை காத்துல பறக்க விடுவது தான் அவருடைய ஸ்டைல் ஆச்சே. இந்த மண்டபம், அந்த தலைவர் பேரப்பிள்ளைங்க காலத்திலாவது வருமா என்று, முதல் சி.எம்.,மின் பேரக்குழந்தைங்க எதிர்பார்க்கிறதல் தப்பே இல்லை.

***

* பாழாகுது கட்டடங்கள்

கோல்டு மைன்சுக்கு செங்கோட்டையில் இருந்து அமைச்சக ஆபிசர்கள் வர்றாங்க; போறாங்க. அவர்களுக்காக, மாநில கேபிடல் சிட்டியில், நட்சத்திர ஹோட்டலில் தங்க, ஓய்வெடுக்க ரூம் போடுறாங்க. மைனிங் கெஸ்ட் ஹவுஸ் இருந்தும், அதனை பயன்படுத்தல. ஏன்னா, அந்த ஹவுஸ் சிதிலமடைந்து உள்ளது.

மைனிங் நிறுவன பராமரிப்புக்காக இப்பவும் நிதி வரத்தான் செய்யுது. ஆனால் அது எதுக்கு, யாருக்கு, பிரியோஜனம் ஆகுதோ.

மைனிங் சேப்டி அலுவலகம், ரெஸ்க்யூ ஸ்டேஷன், ஆர்ஜென்ட் நிர்வாக அலுவலகம், சுரங்கத் தொழில் பயிற்சி நிலையமான வி.டி., சென்டர் உட்படபல புகழ்பெற்ற அலுவலகங்கள், கோல்டு மைன்ஸ் நிறுவியவர் பங்களா ஆகிய பல பள்ளி, கிளப் கட்டடங்களை வரலாற்று சின்னங்களாக பாதுகாக்க வேண்டுமுன்னு அக்கறை உள்ளவங்க சொல்றாங்க.






      Dinamalar
      Follow us