யார் தலை உருளுமோ?
கோளாறான கோலாரு லோக்சபா தொகுதியில் 16 பேர் போட்டின்னு பட்டியலில் இருந்தாலும், பலமான இரு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையே தான் கடும் போட்டி. இதில் 'கை' கட்சிக் காரருக்கு எட்டு தாலுகா நகரங்களில் ஓட்டுகள் 'ஓகே' தானாம். ஆனால், கிராமங்களில் 'டவுட்' என்கிறாங்க.
கிராமத்தில பூக்காரங்க, புல்லுக்கட்டு காரங்க தண்ணியா இறைச்சிட்டாங்களாம். இதனால் கை காரங்க திணறிட்டாங்க. இப்பவே ஒருத்தர் மேல ஒருத்தர் குற்றம் சொல்லி தப்பிக்க பாக்குறாங்க. கிராமப்பகுதிகளில் கை காரங்களுக்கு பட்டுவாடா செய்ய ஆளே இல்லையாம். வேட்பாளரின் தகவல் காதுக்கு போயிருக்கு.
கோல்டு தொகுதியில் கிராமத்தில் கை பக்கம் ஓட்டு கேட்க ஆளே இல்லாமல் போனதற்கு யார் காரணமுன்னு வேட்பாளருக்கே புரிஞ்சி போச்சிதாம். இதுக்கு தான் நம்பியவரிடம் கொடுத்தோமான்னு இப்பவே கணக்கு பார்த்து வராங்க. இந்த கணக்கு விபரங்கள் டி.சி.எம்., கவனத்துக்கு தெரிவிச்சாச்சி.
ஒருவேளை கை கட்சிக்கு சரிவு ஏற்பட்டால் சும்மா விடப்போறதில்லன்னு தன் பார்வையை அவரு காட்டி இருக்காராம். இதில் யார் தலை எல்லாம் உருளுமோ?
ஓட்டுக்கு வந்த 'துட்டு'
கோல்டு சிட்டி தொகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் மளிகைக் கடையில் 47 'எல்' இருந்ததை, சோதனையில் தேர்தல் அதிகாரிங்க அள்ளினாங்க. அந்த தொகை, 'தனக்குரியது' என்று முன்னாள் அசெம்பிளிக்காரரின் மகன் ஒப்புக் கொண்டாராம். தேர்தல் நேரம் என்பதால், தனக்கு சொந்தமான தொழிற்சாலை பணியாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்ய பொருட்கள் வாங்க, தன் வீட்டில் பணத்தை வைக்காமல் பாதுகாப்பாக நண்பர் கடையில் வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துட்டாராம்.
தேர்தல் விதிகள் முடிந்த பின், கோர்ட் மூலம் திரும்ப கிடைச்சிடுமாம். அப்புடின்னா ஓட்டுக்கு வந்த 'துட்டு' எந்த கணக்கு. அசெம்பிளி தேர்தல்ல கூட கட்சிப் பணம் காணாமல் போன கதை போல, இப்பவும் தேர்தல் 'துட்டு' பற்றி பூக்கார கோஷ்டிங்க பேசுறாங்க.
யாருக்கும் வெட்கமில்லை!
கோல்டன் தொகுதி அசெம்பிளி தேர்தலில் எக்கச்சக்கமா செலவழிச்சி 1வது, 2வது இடத்துக்கு வராத வேட்பாளரா இருந்த ஒரு கட்சியின் மகா தலைவரு, தான் இழந்த பணத்தை மீட்க, லோக்சபா தேர்தல்ல, எந்த கட்சியில் இருந்து பணம் அதிகமா கிடைக்குதோ, அந்த பக்கம் ஆதரவு தெரிவிக்க தயாராக இருந்தாராம். 500 ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாக கொண்டு வந்து கொட்டினதை, கொடுத்தவரே ஊதி பெரிசுபடுத்திட்டாராம்.
ஓட்டுப் பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக தனது விசிறிகளுக்கு புல்லுக் கட்டுக்கு ஓட்டு போடும்படி பணம் வாங்கினவர் சொன்னாராம். தொகையை எதிர்பார்த்த விசிறிகள் வெறுங்கையோடு வந்துட்டாங்களாம்.
'எங்க கட்சிக்காரங்க ஒரு போதும் விலை போக மாட்டாங்க'ன்னு, தன்மான வசனம் பேச, தலைவர் பஞ்சம் வைக்கலயாம். அப்படியும் ஒரு சிலருக்கு அவரே பட்டுவாடா செய்ததாகவும் கட்சி வட்டாரம் பேசுது.
யார் தலை உருளுமோ?
ஓட்டுக்கு வந்த 'துட்டு'
யாருக்கும் வெட்கமில்லை!