'மெயின்' பள்ளிக்கு ஆப்பு?
கோல்டு சிட்டி தனியார் பள்ளியில் புத்தகம், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பதற்கு மாவட்ட கல்வி அதிகாரி ஆப்பு வெச்சிட்டாரு. இதனால் ஒரு 'மெயின்' பள்ளி விற்பனைக்கு பூட்டு போட்டுட்டாங்க. நீண்ட வரிசையில் நின்று அவதிப்பட்ட பெற்றோர்கள், நிம்மதி அடைந்துள்ளனர். பல பணக்கார பள்ளிகளிலும் இதுபோல் நடக்கிறதாம். அங்கேயும் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடப்பதாக பத்திக்கிச்சு. அவங்க எல்லாம் 'அலெர்ட்' ஆகிட்டாங்க. புத்தகங்கள், மற்றும் கல்விக்கு பயன்படும் பொருட்கள் இங்கு 'நோ சேல்' என்ற போர்டும் விரைவில் எதிர்பார்க்கலாம். யாரோட தைரியத்தில அரசு உத்தரவை மீறுறாங்க என்பதன் பின்னணியை துருவி வர்றாங்க. இந்த விற்பனையில் மட்டுமே பல லட்சம் ரூபாய் வர்த்தகம் நடக்குதாம். இதில் கிடைக்கிற வருமானத்தில் யார் யாருக்கு கமிஷன் போகிறது என்ற விபரங்களையும் மாநில கல்வித்துறை உயர் அதிகாரி வரையில் எட்டிடுச்சு.
****
உத்தரவாதம் தருவது யார்?
உ.பேட்டை சாலையை ஜூன் 6 க்கு பின், சீரமைப்பதாக உத்தரவாதம் கிடைத்திருக்குது. ஓ.கே., ஆனால், செல்டானா முதல் சாம்பியன் வரையிலான சாலைக்கு மறுவாழ்வு எப்போ கிடைக்குமோ.
இந்த சாலைக்கு உட்பட்டு மூன்று வார்டுகள் உள்ளன. இதன் கவுன்சிலர்களும் இருக்காங்க. இவர்களின் வண்டிகளும் இங்கே தான் ஓடுகிறது. ஆனாலும், வேலைகள் எதுவும் நடந்தபாடில்லைன்னு சாலையில் அவதிப்படுறவங்க அங்கலாய்க்கிறாங்க.
ஆட்டோ ஓட்டுறவங்க படும் கஷ்டம் சொல்லி மாளாது. சாம்பியன் சாலை மீது, அப்படி என்ன கோபமோ.
சாம்பியன் கல்லறைக்கு இறந்தவர்கள் உடலை கொண்டுச் செல்லும் வாகனங்களும் பாதிக்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் நேரத்தில் மட்டுமே தலைக் காட்டாமல், அவசிய தேவைகளான அடிப்படை வசதிகள் பக்கமும் பார்வையை செலுத்த வேணும்னு ஜனங்க எதிர்ப்பாக்குறாங்க.
***
காத்திருப்பு ஒரு தொடர் கதை
கோல்டு சிட்டியில் ஐ.டி., பூங்கா, ஜவுளி பூங்கா, தொழிற் பூங்கா வருவதாக சொல்வதை கேட்டு நகரமே எதிர்ப்பார்க்குது. நிலம் கிடைச்சாச்சு. இதற்கான உள் கட்டமைப்பு, ஐந்தாண்டில் வந்து சேருமா அல்லது பார்க்கலாம், செய்யலாம் என்ற பழைய பல்லவியை பாடுவாங்களா.
செங்கோட்டையில் 28 ஆண்டுகள் நிலையாக இருந்தவரு, மைன்சை மூட விடமாட்டேன் என்று உறுதியாக சொன்னாரு. அவர் செங்கோட்டை உறுப்பினராக இருந்த போதே மூடிட்டாங்க.
சைனாட் மண்ணில் தங்கம் இருக்கிறதா என்று சோதனை நடத்த ைஹதராபாத்துக்கு ஒரு கிலோ, ரெண்டு கிலோ எடுத்துச் செல்லாமல், ைஹதராபாத்துக்கு டன் கணக்கில், 100 லாரி லோடு எடுத்து சென்றது என்னவானது. அதை யாருக்கு வித்தாங்க. அந்த மண் சோதனை அறிக்கை எங்கே, என்னானது. இது போல, தொழிற்பூங்கா கதையும் ஆகிட கூடாதென சொல்றாங்க.

