ADDED : ஜூன் 28, 2024 11:11 PM
டவுன்ஷிப் யாருக்கு?
ஒவ்வொரு விழாவிலும் அசெம்பிளிகாரர்மறக்காமல் சொல்வது புதிய தொழிற்பேட்டை. இன்டகரேடட் டவுன்ஷிப், ஐ.டி.பார்க்., சாப்ட்வேர் பார்க் போன்றவை 6 மாதத்தில் பணிகள் துவங்க போகுமாம். 35 கோடியில் ஏ.பி.எம்.சி.,யும் வருதாம்,
அது சரி. இந்த திட்டம் நிறைவேற்ற, அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு. சொல்லணுமில்லா. தொழிற்பேட்டைக்கு அசெம்பிளிக்காரர் தான் விதை போட்டவர் என்பதை நகரமே அறியும். இது வெறும் வாய் ஜால மோடி வித்தை அல்ல என்பதும் புரியும். ஆனால், 'டவுன் ஷிப்' யாருக்கு. பண முதலைகளுக்கா என கூறி வரும், ஊர் வாயை மூட முடியலையே. சொல்லுங்க மேடம் சொல்லுங்க.
ஓவரான அதிருப்தி
சாலைகளுக்கு திடீர் விமோசனம் பொறந்திருக்கு. ஆனால் பூங்காக்களை கவனிப்பார் இல்லை. கழிப்பறைகள் மூடி கிடப்பதை திறந்து, துப்புரவு பணிகள் மேற்கொள்ள திட்டமும் இல்லை. பொது கழிவறைகளுக்கு தண்ணீர் வசதியை காணோம்.
இதையெல்லாம் எடுத்துச்சொல்ல கவுன்சில் கூட்டம் நடக்கவே இல்லை. தெருநாய்கள் தொல்லை ஒரு தொடர்கதை. மாவட்ட கலெக்டருக்கு கோல்டு சிட்டி முனிசி., பக்கம் கவனம் செலுத்த நேரமில்லையோ.
சட்ட சிக்கலில் உள்ள சட்ட மேதை பூங்கா, சீரழிவில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுப்பரா அல்லது 'பவன்' போல அழிய விடுவாங்களா. முனிசி., செயல்பாடுகள் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி தான் ஓவராக இருக்குது. மக்கள் பிரதிநிதிகள் ஏன் மவுனமாக இருக்காங்களோ. இவர்கள் எப்போது வளர்ச்சி திட்ட பணிகளில் செயல்படுவாங்களோ.