sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட்

/

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்


ADDED : மார் 11, 2025 11:02 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோலாருக்கு பம்பர்


ஸ்டேட் பட்ஜெட்டில், முதல்வரின் ஆதரவாளரான கோலாரு அசெம்பிளிக்காரருக்கு கேட்டது கிடைத்திருக்கு; நெனச்சது நடந்திருக்கு.

கோலார்காரருக்கு மந்திரி சான்ஸ் கூட கிடைக்கலாம்னு நம்பிக்கையும் இருக்குதாம். ஏன்னா இவரு, முதல்வர் கோஷ்டியாம். இவரோட தொகுதிக்கு தான் பட்ஜெட்டில் 'பம்பர்' யோகமாம்.

முதல்வரின் நிஜமான நிழலான கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியை அவசரப்பட்டு கன்னா பின்னான்னு ப.பேட்டை அண்ட் கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரங்க உரசியதால், இவங்க தொகுதிகளுக்கு எதிர்ப்பார்த்த வரத்து வராமல் பூஜ்யம் ஆக்கிட்டாராம்.

கோல்டு சிட்டியில் தொழிற்பூங்காவுக்கு பெருமளவு நிதி வருமுன்னு கண்ட கனவு பலிக்க விடாமல் தடுத்து விட்டதா எதிர்கோஷ்டி கசப்பாக பேசுறாங்களாம். மூன்று முறை தேர்வாகியும் மந்திரி பதவி கிடைக்கலயேன்னு ப.பேட்டைகாரர் மன உளைச்சலில் இருப்பதாக தெரியுது.

ஆயினும் கடந்த காலங்களில் முதல்வரே ப.பேட்டை வளர்ச்சிக்கு நிறைய செய்திட்டதாக சி.எம்., ஆபீஸ் வட்டாரத்தில் பேசுறாங்க. இவர் திடீரென டி.சி.எம்., நிழலைத் தேடி சென்றாராமே.

------

* தடுப்பூசி எப்போ?


ப.பேட்டை டவுன் சபை பகுதிகளில் தெரு நாய்களை தேடித்தேடி பிடித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஊசி போட்டு வர்றாங்க. இதுவரை நுாறை தாண்டியதாக தகவல் சொல்றாங்க.

கோல்டு சிட்டி முனிசி.,யில் ப.பேட்டையை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. பல சாலைகளில் தெரு நாய்களின் ஊர்வலமும், மாநாடும் தான் நடக்குது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கையை காணோம்.

இவற்றுக்கு தீனி கிடைக்க தானோ, கோழி இறைச்சி கடைகளின் பெருக்கமும் அதிகரிக்கிறதோ. கோழி இறைச்சி கழிவுகள் இன பெருக்கத்துக்கு 'டானிக்' என்கிறாங்க. அந்த கழிவுகளை கொட்ட எங்க கிடங்கு இருக்கு?

--------

* மேக்கப் முகங்கள்!


நகர் முழுக்க பளீச்னு தெரிய, சாலை சீர்படுத்தும் பணிகளை செய்து வருவது அசெம்பிளி நிதியா அல்லது செங்கோட்டை நிதியா. எது எப்படியோ சென்ட்ரல், ஸ்டேட் என இரண்டு அரசு நிதியும் கோல்டு சிட்டி வளர்ச்சிக்கு செலவிடுவதாக சாலைகளின் மேக்கப் முகங்கள் காட்டுகிறது.

அதிலும் நடைபாதையை இல்லாமல் ஆக்கலாமா. ஏழை, பணக்கார கட்டடங்கள் இடிப்பில் ஓரவஞ்சனை காட்டப்பட்டது ஏன். ஏழைகள் கட்டடம் மட்டும் இடிக்கப்பட்டது தான் சட்டம் நியாயமா?

தேசப்பிதா சந்தையில் எல்லா சாலையுமே சீர்கெட்டு உள்ளது. இறைச்சி கசாப்பு நிலையத்தை நவீனப்படுத்துவதாக சொல்றாங்களே தவிர, சிதைந்து கிடப்பதை புதுப்பிக்க நிதி நெருக்கடியா அல்லது வேடிக்கை பார்க்க விட்டு வெச்சிருக்காங்களா?

மீன் கடைகளின் கழிவுநீர் வெளியேறாமல் தேங்குவதை, பொறுப்பு அதிகாரி ஒரு முறையாவது பார்த்தாரா? சுகாதார சீர்கேடை போக்க கூடாதென ஏதாச்சும் சபதம் எடுத்திருக்காங்களா. முனிசி., நிதி கஜானாவில் பல கோடி ரூபாய் இருப்பதை என்ன செய்ய போறாங்களோ?

-------

* இ- - காத்தா சாத்தியமா?


ரா.பேட்டைக்கு உட்பட்ட ரா.கா. லே -- அவுட் பகுதியில் இ - காத்தா பதிவு செய்ய, 600 ரூபாய் கட்டணம் என முனிசி., அழுத்தமாக தெரிவித்தும், சில பேரிடம் 25 ஆயிரம் ரூபாய் வரை பறித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் யார் யார் வீட்டுக்கு எவ்வளவு கை மாறிடுச்சோ?

கவுடனகெரே ஏரியை காணோம்னு ஊரறிஞ்சவங்க தேடி வரும் வேளையில், ஆசையை வெறுத்த கவுதமரின் பெயரில் வீடுகளாக மாறியிருக்கிறதாம். இந்த இடத்திற்கு இ- - காத்தா தருவாங்களா?

இதன்படி என்ன செய்யப்போறாங்க. மீண்டும் ஏரியை மீட்க, சிறிய நீர் வளத்துறை நடவடிக்கை எடுக்குமா. இது பற்றி பல்வேறு வகையான, 'ரீல்கள்' ஓடிக்கொண்டிருக்குது.

***






      Dinamalar
      Follow us