ADDED : மே 10, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல் : தங்கவயல் மஹாவீர் ஜெயின் உயர்நிலைப் பள்ளி மாணவி, 625க்கு 623 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
தங்கவயல் கல்வி வட்டாரத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,யில் 1,630 மாணவர்கள், 1,538 மாணவியர் என 3,168 பேர் தேர்வு எழுதினர்.
இதில், 930 மாணவர்கள், 1,174 மாணவியர் என மொத்தம் 2,104 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இது 66.41 சதவீதம் ஆகும். ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மஹாவீர் ஜெயின் உயர் நிலைப்பள்ளி மாணவி தர்ஷிதா, 625 க்கு 623 மதிப்பெண் எடுத்துள்ளார்.
இவர் ராபர்ட்சன்பேட்டை சொர்ண குப்பம், 12வது கிராசில், தந்தை ஆனந்த், தாய் பத்மஸ்ரீ உடன் வசித்து வருகிறார்.