sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட்!

/

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!


ADDED : ஜூன் 11, 2024 10:41 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழி வேறு பக்கம்!


பெரிய தேர்தலில் ப.பேட்டையிலும், முல்பாகலிலும் ஓட்டு கொறஞ்சதால தான் தோற்றதாக கை வேட்பாளர் தெரிவிச்சாரு. இதற்கு ப.பேட்டை அசெம்பிளிக்காரர் உண்மையை ஒத்துக்காம, வேட்பாளர் வெளி மாநிலத்துக்காரர் என்று எதிர் தரப்பினர் பலமாக பிரசாரம் செய்துட்டாங்க. அதனால ஓட்டு வராம போச்சு. இது ஒருபுறம்.

கோலார் மாவட்டத்தில், 'முன்னாள்' சபாநாயகர், 'முன்னாள்' எம்.பி., கோஷ்டி சிக்கலால் தான் கை காரர்களே தடம்புரண்டு போய் விட்டதால வரவேண்டிய ஓட்டு வராம போச்சு என்பதையும் சொல்லி, தன் மீது தப்பே இல்லை என்ற படி முழங்கி இருக்காரு.

இதெல்லாம் நம்புறாப்பல இல்லை. இவரும் உள்குத்து வேலை செய்து, இவரோட கட்சிக்காக எலக் ஷன் வேலையை பார்க்கவே இல்லை. இவர் அசெம்பிளிக்கு போட்டியிட்ட போது அதிகமாக ஓட்டுகள் வந்த இடத்திலேயே குறைஞ்சு போனத மறந்து பேசுறாரே.

வீடுகள் சொந்தம் ஆகுமா?


கடந்த நான்கு ஆண்டுகளில், 4.21 கோடி வீடுகளை ம.அரசு கட்டிக் கொடுத்தாங்க. இதில் கோல்டு சிட்டியில் ஒரு வீட்டை கூட கட்டி கொடுக்கலை. இத்தனைக்கும் கோல்டு மாவட்டத்தின் செங்கோட்டை உறுப்பினரா இருந்தவரே மத்திய ஆளுங்கட்சியான பூக்கட்சிக்காரர் தான்.

இவரின் தொகுதியில் உள்ள கோல்டு சிட்டியில் மத்திய அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் எந்த உரிமமும் இல்லாமல் நான்கைந்து தலைமுறையா வசிக்கிறவங்களுக்கு சொந்தம் ஆக்கி கொடுக்கலையே.

இப்போது 3 கோடி வீடுகள் சகல வசதியோட கட்டி தரப் போறதா ம.அரசு அறிவிச்சிருக்கு. இந்த தருணத்திலாவது குடியிருக்கும் 15 ஆயிரம் வீடுகளை ம.அரசு சொந்தம் ஆக்குமா. இவ்விஷயத்துல புல்லுக்கட்டு புதியவர் சாதனை படைப்பாரா அல்லது இவரும் முந்தைய உறுப்பினர்கள் போலவே பதவி காலத்தை வீணடிப்பாரா. பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்சி ஆபீஸ் உருவாகுமா?


கை கட்சிக்கென ஆபீஸ் ஏற்படுத்த ரா.பேட்டை அரசு மருத்துவமனை அருகே 120க்கு 60 சைஸ் மனையை 40 ஆண்டுக்கு முன்னாடி வாங்கினாங்க. இதை சில தலைவர்கள் ஆட்டைய போட திட்டம் போட்டாங்க. ஆனா, தோல்வி தான். கட்சியின் சொத்து என்பதை உறுதிப்படுத்தி, பட்டா தயார்படுத்தினாங்க.

அப்போது, எம்.பி.,யாக இருந்த, தற்போது மந்திரியாக இருக்கும் கைக்காரரை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினாங்க. அதற்கான கல்வெட்டு மாயமானது. முதல்வரின் அரசியல் ஆலோசகரான கோல்டு சிட்டி மண்ணின் மைந்தரும் இது பற்றி கண்டுக்கவே இல்ல.

இரண்டாவது முறை அசெம்பிளிக்கு தேர்வாகி இருப்பவர், அவரின் நைனா போலவே நமக்கென்ன போச்சுன்னு மவுனமாகவே இருந்து வராரு. இந்த காலி மனையை மாநில தலைமையிடம் ஒப்படைச்சா, அவங்களாவது இதன் பேரில் அக்கறை செலுத்துவாங்களேன்னு, பிளாட் பாரத்தில் அரசியல் நடத்தும் உண்மை கட்சி விசுவாசிகள் எதிர்பாக்குறாங்க.

அடுத்த தலைவர் யார்?


கோல்டன் முனிசி., தலைவர் தேர்தலில் பூ, புல்லுக்கட்டு, நீலக்கொடி ஒண்ணா கூட்டணி வச்சாலும் 'கை' அமுக்கி விடும். மொத்தமுள்ள 35 கவுன்சிலர்களில் பூ 3, புல்லுக்கட்டு 1, நீலம் 1 ஆக இந்த கூட்டணியில 5 பேர் தான்.

சுயேச்சை லிஸ்ட்டில் உள்ள மூன்று பேரு அணி சேராம இருக்காங்க. மற்றவங்க, கை பிடியில் சிக்கிட்டாங்க. கை பக்கம் 27 பேர் ஒரே அணியாக வலுவாக இருக்காங்க.

விரைவில் தலைவர் பதவிக்கு தேர்தல் வரப்போகுதாம். அப்படி வந்தாலும், கை பக்கமே நிர்வாகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்து நான் தான் தலைவர் என்ற பேச்சோடு சிலர் நடமாட, சிலர் இட ஒதுக்கீடு வரும் வரை காத்திருக்காங்களாம்.






      Dinamalar
      Follow us