sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட்!

/

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!

1


ADDED : ஜூன் 06, 2024 04:07 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 04:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொலைநோக்கு பார்வை!


அப்பாடா, இனி தனக்கு எதிரா அடுத்த அசெம்பிளி தேர்தலில் போட்டி போட புல்லுக்கட்டுகாரர் வரமாட்டாரு.அதனால் தானே, அவர் ஈஸியாபெரிய தேர்தலில்ஜெயித்து செங்கோட்டைக்கு போகட்டும்னு அவருக்கு ஆதரவாக, 'உள்குத்து' வேலைகள் செய்தேன்னு ப.பேட்டை அசெம்பிளிக்காரர்பெருமூச்சு விடுறாராம்.

ப.பேட்டையில் 2023 அசெம்பிளி தேர்தலில்,தனது சுயநலத்திற்கு கைக்கு வாங்கிய ஓட்டுகள் 77,292. ஆனால்,2024 பெரிய தேர்தலில் அதே ப.பேட்டையில் அதே 'கை'க்கு கிடைச்ச ஓட்டுகள் 64,216 மட்டுமே. அப்புடின்னா, 13,076ஓட்டு எப்படி குறைஞ்சது.தான் ஜெயிக்க மட்டுமே கஷ்டப்பட்டவரு, அடுத்த அசெம்பிளி தேர்தலுக்கும் கணக்கு பார்த்து,'கை'யை உடைச்சிட்டாரு.

இந்த லட்சணத்தில், இவருக்கு மந்திரி பதவி வேணுமாம். கட்சி உருப்பட்ட மாதிரிதான். தன் தொகுதியில் பாதிப்பே இருக்க கூடாதென தொலைநோக்கு பார்வையில், 'கை'க்கு கட்டு போட்டுட்டாரு.

அடுத்த முறை மருமகன்!


கோலார் லோக்சபா தொகுதியில், மந்திரி முனி.,மருமகனுக்கு சீட் கேட்டாரு. கிடைக்காம போனதால்,அவரது காலடி சத்தமே கோலார் பக்கமே கேட்காமல் போனது. ஆனால், தேர்தல் முடிவுக்கு அப்புறம் பூவும், புல்லுக்கட்டு பெண்ணும் ஒற்றுமையாக இருந்ததாலே ஜெயிச்சாங்கன்னு பெருமைப்படுறாரு;உபதேசம் செய்றாரு.

சொந்த கட்சிக்குள்ஒற்றுமையைகாட்டாதவர் அடுத்தகட்சிக்கு விசிறியாக செயல்படுவதே அவருக்கு வழக்கமா போச்சு.அடுத்த தேர்தலில் மருமகனுக்கு சீட் கேட்க, இப்பவே பிளான் செய்து, கையை தோற்கடிக்க மறைந்திருந்து அம்பு ஏய்தினாரோன்னு ஜனங்களை யோசிக்க வெச்சிட்டாரு.

மாயமான தலைவர்கள்!


ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்துக்கு கை கட்சியின் ஒரு தலைவரும் வரவே இல்லை. கை வேட்பாளருடன் அவரின் நெருங்கிய கோல்டு சிட்டி நண்பர் மட்டுமே வந்தாரு. ஆனால்,மற்ற தலைவர்களைகாணலயே. அப்படின்னாஎட்டு அசெம்பிளி தொகுதிகளிலும் என்ன வேலை பார்த்தாங்கன்னு அவங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை போலும்.

எதுக்காக கவுன்டிங் சென்டருக்கு போகணும், அங்கு போய் முக்காடு போட்டுக்கணும்னு வீட்டில், 'ரெஸ்ட்' எடுத்துக்கிட்டாங்களோ. கோல்டு சிட்டியில் கூட நகரில் மட்டுமே கை பக்கம் ஓட்டுகள் குவிஞ்சுது. கிராம பக்கம் காலை வாரும் வேலை நடந்திருக்கு. இல்லாட்டி, ஒரு லட்சம் ஓட்டு இங்கு மட்டும் எகிறி இருக்கும்னு பூத் அளவில் கணக்கு பார்க்க தெரிஞ்சவங்க சொல்றாங்க.

காத்திருக்கும் சவால்கள்!


செங்கோட்டையில் கால் வைக்கும் கோலாரின் புல்லுக்கட்டு காரருக்குதொகுதி வளர்ச்சிக்கு பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்குதாம். குறிப்பா, கோல்டு சிட்டியில் பின்தங்கி கிடக்கும் ம.அரசின் பல திட்டங்களை நிறைவேற்ற வேணும். ஏற்கனவே ஒதுக்கி இருந்த நிதியை யார், யார் எவ்வளவு தின்னு ஏப்பமிட்டாங்களோ... அதுல கவனம் செலுத்தணும்.

பத்து வருஷத்தில ம.அரசுபல 'சி' நிதி கொடுத்தாங்க. அதற்கான வேலைகளை பார்க்கணும். கோல்டு மைன்ஸ் மருத்துவமனை, ரயில்வேதிட்ட வளர்ச்சிக்கு வந்த நிதி, அம்ருத் சிட்டி, சுவேச் பாரத், ஏரிகள் புனரமைப்புன்னு தாராளமாநிதி கொடுத்தாங்களாம்.

இவைகளில் பெரும் ஊழல் நடந்ததாக விஷயம் தெரிந்தவங்க சொல்றாங்க. அதை தோண்டினாலே நல்ல பேரை சம்பாதிக்கலாமென புல்லுக்கட்டுக்காரங்க சொல்றாங்க!






      Dinamalar
      Follow us