ADDED : ஜூன் 27, 2024 11:00 PM
'பங்களிப்பு'க்கு தயார்!
மாவட்ட கல்வி ஆபீசரு பொன்னான நகரில் உள்ள அனைத்து பிரைவேட் பள்ளி நிர்வாகிகளையும் ஜூலை 1ல் அழைத்து கல்வி விதிமுறைகள் பற்றி பேசப் போகிறாராம். எப்படியும் அவருக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கும்பல்ஒரு சுற்று பேசி வெச்சிருக்காங்க. என்னென்ன முறைகேடுகள் நடக்குதென லிஸ்ட் காட்டி பரிகாரம் தேடச் சொல்லி இருக்காங்க.
இதனால்பிரைவேட் பள்ளி நிர்வாகங்கள், தங்களது, 'பங்களிப்பை' தர தயாராகிட்டாங்க.எப்படியும் பல, 'எல்' குவியஎதிர்பார்ப்பு இருக்குது. இதற்கு வட்டார ஆபீசரு தான் கலெக் ஷன் காரராக வேலை பார்ப்பதாக சொல்றாங்க.
இதுதான் கட்சி பக்தியா?
ஆ.பேட் டை பஸ் நிலையத்தில் முன்னாள் பி.எம்., சிலையைவெச்சிருக்காங்க. அதனை வெச்சவங்கமறந்துட்டாங்க.25 ஆண்டுகளாக திறக்கப்படாமல், கந்தை துணிகளை போர்த்தி கேவலப்படுத்தியிருக்காங்க. 28 வருஷமா எம்.பி.,யாக இருந்தவரும் கண்டுக்கல. அவரது மகள் ரெண்டாவது தடவை அசெம்பிளிக்கு தேர்வாகியும் அவரும் கவனிக்கல.இது தான் கட்சி மீது அவர்களுக்கு உள்ள பக்தியா என ஜனங்க பேசுறாங்க.
கந்தை துணியை போர்த்திக்கொள்ள தான் சிலையாக நிற்பவர் விரும்பினாரா. ஏன் இந்த ஆண்டிக்கோலம். இந்த நகரின் ஏழ்மை நிலையை சித்தரிக்கவா?
சுரங்க நிலம் 'ஸ்வாஹா!'
சுரங்க குடியிருப்பு பகுதியில்மழைநீர், கால்வாய்நீர்சேரும் இடமாகபல ஏரிகள் இருந்தது. அவைகள் மாயமாகின. பல ஏரிகள் மெல்லஅழிந்து வருகிறது. அது புதர் மயமாகவும், புதருக்குள்கட்டடங்களும் முளைக்கின்றன. நிலம் ஆக்கிரமிப்பு ஏரிகளை விட்டு வைக்கல. ஏற்கெனவே மைன்ஸ் நிலம் ஸ்வாஹா ஆகியுள்ளது.
இதற்கு பாதுகாவலர் கண்டுகாமல் கண்ணை பொத்திக்கொள்ள கொல்லை புறமாக பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.இவைகளை சீரமைப்பு செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க செங்கோட்டையில் இருந்து ஆர்டர் வரவேணுமாம்.
மருத்துவ கருவிகள் எங்கே?
அவசர அவசரமாகமைன்ஸ் கம்பெனி மருத்துவமனையை சீரமைத்து கொரோனா சிகிச்சை மையமாக உருவாக்கினாங்க. இதை மீண்டும் இயக்க பலர் ஆர்வம் காட்டினாங்க. ஆனால் கொரோனா கட்டுக்குள் வந்ததும் பழையபடி மூடிட்டாங்க.
இதுபோன்ற உள்கட்டமைப்பு உள்ள ஒரு மருத்துவமனையை வேறெங்கும் காண்பதரிது என விபரம் அறிந்தவங்க சொல்றாங்க. ஆனால் அங்கிருந்த மருத்துவ கருவிகள் என்னானதோ. யார் கொள்ளையடித்து கும்மாளம் போட்டாங்களோ.
பொன்னானநகரில் சிகிச்சை குறைபாடு போக்க, இந்த மருத்துவமனையை மீண்டும் ம.அரசே ஏற்று, இலவசசிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டுமென சிலர்புதிய செங்கோட்டைக்காரருக்கு அழுத்தம் தராங்க.இவராகிலும் மருத்துவ வசதிக்கு வழி செய்வாரா. அல்லது இதற்கு முன் அதிகாரத்தில்இருந்தவர்கள் போல காலத்தை வீணடிப்பாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

