sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட்!

/

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!


ADDED : ஆக 22, 2024 03:57 AM

Google News

ADDED : ஆக 22, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யார் அந்த கருப்பு ஆடுகள்?

மைன்ஸ் நடக்கும்போது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சங்கம் உட்பட 18 தொழிற்சங்கங்கள் இருந்தன. அவை எங்கே போனதோ? 2001ல் மைன்ஸ் மூடியதும், மொத்த சங்கங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போனது.

நிலுவைத் தொகை வழங்க, ஹைகோர்ட் உத்தரவு வந்தும் கூட, அதைப்பற்றி மத்திய அரசையோ, மைன்ஸ் நிர்வாகத்தையோ அணுகி கேட்காமல் மவுனமாக இருந்தாங்க. கோர்ட்டு உத்தரவுப்படி நிலுவைத் தொகை தானாக கிடைத்திடும்னு அலட்சியமாக இருந்தாங்க. ஆனால், நிர்வாக அதிகாரிகளோ மேல் முறையீடு போயிட்டாங்க.

ஏற்கனவே 24 வருஷமா நிலுவைத் தொகை கிடைக்கல. இப்ப, மேல்முறையீடு போயிட்ட தால இன்னும் தாமதம் ஆகும் போல. தனியார் கூட்டு முயற்சியில் மைன்ஸை நடத்த வேகம் காட்டிய, 'சொசைட்டி கும்பல்' நிலுவைத் தொகையை வேணாம்னு எழுதி கொடுத்து துரோக கையெழுத்து போட்டாங்கன்னு பழைய கதையும், புது தகவலாகவும் வெளியே வந்திருக்கிறது.

யார் அந்த கருப்பு ஆடுகள் என்பது பற்றி தான் தொழிலாளர் மத்தியில் பேச்சாக உள்ளது.

--------

* வேகம் - விவேகம் வேண்டாமா?

தங்கநகர் தொகுதியில் அரசியல், சமூக, பொது பிரச்னைகளில் அக்கறை காட்டி வந்த பூ கட்சி, அசெம்பிளி, லோக்சபா தேர்தலுக்கு பிறகு அக்கட்சியினரிடம் வேகம், விவேகம் ஒண்ணுத்தையும் காணோம். பூ மந்த கதியில், வாடி உள்ளது.

நகர வளர்ச்சிப் பணிகளுக்கு ம. அரசு பல, 'சி'க்களை வாரி வழங்குது. அந்த தொகையில் முனிசி.,யில் என்னென்ன வேலைகள் நடக்குதுன்னு கேட்கவும் ஆளில்லை.

ம.அரசின் அம்ரூத் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு நகர சாலைகளில் பள்ளம் வெட்டி பாழாக்கினதுக்கு தான் 100 'சி' வீணானதோ.

கழிவுநீர் கால்வாய்க்கு இரும்பு உருளைகள் பதித்ததோடு வேலை முடிந்து போயிருக்கு. எதுக்காக அந்த உருளைகள் பதித்தாங்க. அதனால் ஊருக்கு என்ன பயன் ஆனது? இதுவும் ம.அரசின் நிதி தானாம். இதையாவது பூ காரங்க கேட்டிருக்கலாமே.

------

* புது வசந்தம் எப்போது?

கோல்டு சிட்டியில் தொழிற் பூங்கா, சகல வசதியுடன் இணைந்த நகரம், இவைகளின் பாதுகாப்புக்கு 100 ஏக்கரில் காக்கி பயிற்சி மையம் ஏற்படுத்த போறாங்களாம். இதை, மேடைதோறும் கூவுறாங்க. இந்த ரிக்கார்ட் தேய்ந்து போனது தான் மிச்சம்.

ஏற்கனவே, இருக்கிற சிட்டிக்குள் ஆ.பேட்டை முக்கிய சாலை, உ.பேட்டை சாலை, 2வது எம்.ஜி.மார்க்கெட் சாலை உட்பட சீரில்லா பல சாலைகளுக்கு புது வசந்தம் எப்போது கிடைக்க போகுதோ.

-------

* அக்கறையில்லாத கல்வி துறை!

கல்வி சாலைகளை கோவிலாக மதிக்க வேணும்னு பலரும் அறிவுரை சொல்றாங்க. ஆனால், கோல்டு சிட்டியில் உள்ள அரசு பள்ளிகள் ஒவ்வொன்றும் ஓட்டை உடைசலாக காரை பெயர்ந்து விழுந்து ஆபத்தில் இருக்கிறதே.

வட்டார கல்வித்துறை பாராமுகமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு மாதாந்தோறும் தவறாமல் சம்பளமும், கிம்பளமும் கிடைச்சால் போதுமென இருக்காங்க.

பள்ளிகளின் கட்டடங்களில் சிமென்ட் கூரையின் காரை எப்போது நொறுங்கி விழுமோ, எத்தனை பேரை பலி வாங்குமோ தெரியல. உதாரணத்துக்கு வட்டார கல்வி அதிகாரி ஆபீஸ் பக்கத்தில் இருக்கிற பள்ளி கட்டடம் ஒன்றே போதும்.

மாநிலத்தின் முதல் முதலமைச்சர் படித்த பள்ளி, மைசூரு மகாராஜா திறந்த வெச்ச பள்ளிகளின் கட்டட சிமென்ட் கூரைகள் படுமோசமாகவே இருக்குது.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால், இந்த பள்ளிகளை சீரமைக்க கவனிச்சிருக்கலாமே. மக்கள் பிரதிநிதிகள் பார்வையும் கூட பள்ளிகள் மீது இல்லையே.

***






      Dinamalar
      Follow us