தாவணகரே வெண்ணெய் தோசை; பிரசாரத்தில் ருசி பார்த்த யதுவீர்
தாவணகரே வெண்ணெய் தோசை; பிரசாரத்தில் ருசி பார்த்த யதுவீர்
ADDED : மே 03, 2024 10:54 PM

தாவணகெரே : தாவணகெரே பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மைசூரு குடும்பத்தின் யதுவீர், வெண்ணெய் தோசை ருசி பார்த்தார்.
கர்நாடகாவில் முதல்கட்டமாக நடந்து முடிந்த 14 லோக்சபா தொகுதிகளில், மைசூரில் பா.ஜ., சார்பில் மன்னர் குடும்பத்தின் யதுவீர் போட்டியிட்டார். இரண்டாம் கட்டமாக நடக்கும் 14 தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள ஆதரித்து, யதுவீர் பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று வெண்ணெய் தோசைக்கு பெயர் பெற்ற தாவணகெரேயின் பா.ஜ., வேட்பாளர் காயத்ரி சித்தேஸ்வருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இதை தொடர்ந்து 'ஸ்ரீ குரு கோட்டீஸ்வர்' ஹோட்டலில், வெண்ணெய் தோசை ருசித்து சாப்பிட்டார். அவருடன் வேட்பாளர் காயத்ரி மற்றும் கட்சியினரும் சாப்பிட்டனர்.
பின், யதுவீர் கூறுகையில், ''எங்களின் தேர்தல் பிரசாரத்தை, வெண்ணெய் தோசை சாப்பிட்டு துவங்குகிறோம். மைசூரை தவிர, எனக்கு தாவணகெரே உணவு வகைகள் பிடிக்கும். தாவணகெரேயுடன் உணர்வுபூர்வமான சம்பந்தம் உள்ளது.
''கட்சியின் தொண்டனாக இங்கு பிரசாரம் செய்ய வந்துள்ளேன். பிரதமர் மோடியின் ஆட்சியை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். பத்து ஆண்டுகளில் பல வளர்ச்சிகள் நடந்துள்ளன. கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும்,'' என்றார்.
இதை தொடர்ந்து, பகத் சிங் நகர், கே.டி.ஜே.நகர், கே.பி. லே - அவுட், சிவப்பா சதுக்கத்தில் யதுவீர் ரோடு ஷோ நடத்தினார்.