ஆயுதங்களால் தாக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி பலி
ஆயுதங்களால் தாக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி பலி
ADDED : மே 10, 2024 05:20 AM

ஷிவமொகா : ஷிவமொகாவில் முன்விரோதத்தில், ரவுடிகள் இருவர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர். கொலையானவர்கள் ஆயுதங்களால் தாக்கியதில், படுகாயம் அடைந்த ரவுடி, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
ஷிவமொகா லஸ்கர் மொஹல்லாவில் வசித்தவர் யாசின் குரேஷி, 33; ரவுடி. இவருக்கும், எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடிகள் ஷோஹிப், 30, கவுஸ், 35 இடையில் முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் லஸ்கர் மொஹல்லா மீன் மார்க்கெட்டில் உள்ள கடையின் முன்பு யாசின் குரேஷி நின்றார்.
அப்போது அங்கு வந்த ஷோஹிப், கவுஸ் ஆகியோர், யாசின் குரேஷியை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த, யாசின் குரேஷியின் கூட்டாளிகள், ஷோஹிப், கவுசை பிடித்து தாக்கினர். அவர்கள் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துவிட்டு தப்பினர்.
வெட்டு பட்டதில் உயிருக்கு போராடிய, யாசின் குரேஷி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார்.
ஷிவமொகாவில் 24 மணி நேரத்திற்குள் மூன்று ரவுடிகள் கொலையாகி இருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.