ADDED : ஜூன் 18, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: பெலகாவி மாவட்டம், முத்லகியின் நாகனுார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் வினய் லட்சுமண், 8. நேற்று காலை நாகனுார் அருகே சாலையை கடக்கும் போது, வேகமாக வந்த கார், அவர் மீது மோதியது.
படுகாயமடைந்த சிறுவனை, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரே மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிறுவனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், சிறுவனின் உடலை, கோகாக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதே வேளையில், தன்னால் சிறுவன் உயிரிழந்ததை தாங்க முடியாமல், கார் ஓட்டுனர், தாமாக முத்லகி போலீசில் சரண் அடைந்தார்.